Wednesday, 22 May 2019

முதுமை


இளமையிலே சேமிக்காத பணம்
தண்ணீர் இல்லாத கிணறு போல்
வாழ்க்கை பயனற்றதாகி விடுகிறது.
முதுமையில் உறவென்று கூட்டமாய்
காக்கைகள் கூடாது.
முதுமை கொடியதாகி விடுகிறது.

Saturday, 27 April 2019

இதுவும் ஒரு வகையான தியாகம்தான்

நான் வாழ வேண்டும் என நினைத்தால்,
எனக்கு துரோகம் இழைத்த பல பேர் நடுத்தெருவில்
நிற்க வேண்டி வரும்.
அதனால்தானோ என்னவோ நான் நடைபிணமாகவே
மரிக்க நினைக்கின்றேன்.

Tuesday, 9 April 2019

கர்மாவின் வேலை


விஷநாகம் கொத்தினால் விஷமே.
நல்லபாம்பாக இருந்தாலும் சரி,
ராஜ நாகமாக இருந்தாலும் சரி,
அது விஷம்தான்.
நாகம் என தெரிந்தே கழுத்தில் போட்டுக்கொண்டு
ஆட்டம் போட்டால் உன் கதி அதோ கதிதான்.
கர்மா அதன் வேலையை நன்றாக செய்யும்.

Tuesday, 5 March 2019

நகைச்சுவையின் முடிவு


நகைச்சுவை நடிகர் என்று
மற்ற நகைச்சுவை நடிகரைபோல்
நடிக்க ஆரம்பிக்கிறாரோ
அன்றே அவரிடம் நகைச்சுவை
தீர்ந்துவிட்டது என
பொருள்.

Wednesday, 5 December 2018

கலியுக சுழற்சிநாம் மற்ற உயிர்களுக்கு 

( தெரிந்தோ, தெரியாமலோ ) 

செய்த பாவங்கள், துன்பங்கள் கர்மாக்கள் தீரவும்,
 

கலியுகத்தின் எழுபது சதவீத சுழற்சிக்கு 

பெண்களின் வாய் முக்கிய பங்கு வகிக்கிறது.

Friday, 9 November 2018

வக்கத்தவன்

வக்கத்தவனை தெரு நாய் கூட மதிக்காது.
ஏன் அவன் வீட்டு துடைப்பம் கூட மதிக்காது.
பூமியிலேயே நரகம் முழுமையாக அனுபவிப்பான்.
மரணமே அவனை விட்டு விலகிப்போகும்.

Saturday, 27 October 2018

827 ஆபாச இணையதளங்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடிஇணையத்தளத்தின் ஆபத்தை குறித்து
 (இணையதளம் பேராபத்து என 22 July 2017)
அன்றே எழுதியிருந்தேன். இன்று நான் பயந்தபடி அனைத்தும் நடந்துவிட்டன. தற்போது இந்த நடவடிக்கை(!). இனி என்ன பயன்?. சிறுமிகள் வன்கொடுமை,கள்ள காதல் (இதற்கு நீதிமன்றம் ஆதரவு வேற), ஆசிரியர் மாணவி,மேலும் பல. இதைத்தானே இந்த கார்ப்பரேட் அரசு எதிர்பார்த்தது. நன்றாக நடந்தது இப்போது முடக்கி என்ன பெரும் பயன் ஏற்பட்ட போகிறது?. மொத்த நாட்டிற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் சங்கு ஊதிவிட்டு இப்போது வெறும் முடக்கம்.

Friday, 28 September 2018

ஏமாற்றம்


ஏமாந்தது உன் குற்றமே,
ஏமாற்றியவரின் குற்றம் அல்ல
அளவுக்கு மீறிய நம்பிக்கை
ஏமாற்றத்தில் தானே முடிகிறது.
இதற்கு தீர்வு நம்பிக்கையின் அளவை
நம் கட்டுப்பாட்டில் வைப்பதுதான்.

ஜனனம்


சற்று காலம் தங்கி போக வந்துள்ளோம்,
போகும் இடம் நன்கு தெரியும்.
வாழும் குறுகிய காலத்தில்,
போகும் நேரம் தெரியாததால்...
எத்தனை துன்பங்கள், எத்தனை இன்பங்கள்.

Monday, 3 September 2018

சுவீகாரம்


குழந்தை இல்லையென ஏங்குவர்.
கோவில், குளங்களை சுற்றுவர்.
மருத்துவர்களுக்கு வாரி வழங்குவர்.
சுப நிகழ்ச்சி, சுப காரியங்களை தவிர்ப்பர்.
தம்பதியர் ஒருவரை ஒருவர் குறைகூறி
குடும்ப வெறுமையை அதிகமாக்குவர்.
ஆயிரக்கணக்கில் அனாதைக் குழந்தைகள்
இருந்தாலும் தத்தெடுத்து வளர்க்க
ஒன்றுக்கும் உதவாத சமுதாயத்தை கண்டு அஞ்சுவர்.
அனாதை குழந்தை எந்த ஜாதியோ? ரத்தத்தில் ஜா(தீ)தி!
குழந்தையும் தெய்வமும் ஒன்றென அறியவில்லை.

மனிதம் மரித்தது இந்த இடத்தில்.
சுவீகாரம் எடுத்தவர்களைக் கேளுங்கள்,
அவர்கள் பூமியில் வாழும் காலத்திலேயே
சொர்கத்தை அனுபவிப்பதை கூறுவார்கள்.

இவர்கள் அனுபவிக்கும் துன்பத்திற்கு
இவர்களே பொறுப்பு.

Friday, 31 August 2018

காரியவாதிகள்காரியவாதிகள் நட்பு என்னும் போர்வையில் 
தா(த)ன் காரியங்களை சாதித்து
கொள்கின்றனர். 
அவர்களை நண்பர்கள்
என நம்புவது
மிகுந்த ஏமாற்றத்தையும்,
தோல்வியையும்
நமக்குத் தரும். 
துரோகிகளிலேயே பெரிய துரோகி இவர்களே.

Monday, 30 July 2018

அன்பு


உண்மையான அன்பை உணராமல்,
மாய உலகத்தில் சஞ்சரிப்பது
மீளா துன்பத்திற்கு வ(லி)ழி வகுக்கும்.
கர்மா என்றும் தன் கடமையை செய்யாமல்
விட்டதாக சரித்திரம் இல்லை.

Tuesday, 17 July 2018

இங்கிதம்

இங்கிதம் என்பது தன்னடக்கத்தாலும்,
மற்றவரை மதிக்கத் தெரிந்தவர்களிடம்
இருந்து வருவது.
இங்கிதம் இல்லாதவர்களால் பிறர்க்கு
என்றுமே பிரச்சனைதான்.

Sunday, 3 June 2018

மிகப்பெரிய சாதனையாளர்

மிகப்பெரிய சாதனையாளர் ஆக வேண்டும், 
சாதிக்கவேண்டும் என எண்ணினால்
கண்டிப்பாக திருமணம் செய்யக்கூடாது.


ஒரு வேலை திருமணம் செய்திருந்தால்
மிகப்பெரிய சாதனையாளர் ஆக வேண்டும் 

என்ற எண்ணம் கூடவே கூடாது.
அதையும் மீறி முயற்சி செய்வது இரு தலை கொண்ட பாம்பின்
வாழ்க்கைக்கு சமம்.

Sunday, 20 May 2018

பணிமனைபணிமனை துவங்குவது மிகவும் கடினம்.
அதை ஒருமுறை இழந்துவிட்டால்
மீண்டும் தொடங்குவது 

என்பது மறுபடியும் பிறப்பதற்கு சமம்.
யோசிக்காமல் செய்தால்

(காலம்) யோசிக்காமல் செய்துவிடும்.
பிறகு வாழ்நாள் முழுவதும் வேதனைதான்.

Friday, 11 May 2018

வாழ்க்கை என்னும் பரமபதம்


என் வாழ்க்கை என்னும் பரமபதத்தில் ஏணிகளை விட பாம்புகளே அதிகம்.
எத்தனை முறை தாயம் போடுவது?.
அவமானமே என்னைக்கண்டு அவமானப்படுகிறது.

Friday, 4 May 2018

கீழான மக்கள்


கீழான மக்கள் என்பது ஜாதியை வைத்து பார்க்கவே கூடாது.
அது முற்றிலும் முட்டாள்தனம் மற்றும் அறியாமையே.
மற்றவர் பசியில் இருப்பதை அறிந்து வேலைவாங்குவது,
அல்லது அவருக்கு உணவு படைக்கும் கடமையிருந்தும்,
அதில் கண்டும் காணாமல் இருப்பது போன்ற குணம் உள்ளவர்களே
கீழான மக்கள்.


செல்வச்செழிப்போடு நுனிநாக்கில் பல மொழிகள் பேசினால் அவன் உயர்ந்தவன் என பொருள் கொள்ளக் கூடாது.


சாதாரண உடையில் தாய் மொழி மட்டுமே தெரிந்தவனாயிருந்தாலும்
பிறர் பசியெறிந்து உதவி செய்பவனே உயர்ந்தவன்.


கொடுப்பவனின் கரம் மேலே இருக்கும்.
வாங்குபவனின் கரம் கீழே இருக்கும் என்பார்கள்.

ஆனால் பிறர் பசிக்கு கொடுக்கும் போது  

நீ புண்ணியத்தை பெருகிறாய்.

Monday, 23 April 2018

வன்கொடுமைக்கு மூல காரணம்


எப்படியாவது


எப்படியாவது என்ற சொல் வரும்போதே
அங்கு பிழை நேர்ந்துள்ளது என பொருள்.

Friday, 23 March 2018

குழந்தை


குழந்தை வளர்ப்பு..?
அழாதே உன்னை பள்ளிக்கூடத்தில்
கொண்டு போய் விட்டுவிடுவேன் என மிரட்டுவது
குழந்தைக்கு பள்ளிக்கூடத்தின் மீது பயத்தை உருவாக்கும்.
குழந்தைக்கு தேவை அன்பும், அரவணைப்பும்  மட்டுமே...
அன்பினால் குழந்தையிடம் நாம் நினைத்ததை
நடத்தி முடிக்கலாம்.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என
அன்றே சூசகமாக நம் மூதாதையர் கூறி சென்றனர்.

Monday, 19 March 2018

தொழில்


 


தொழில் செய்ய தொழில்நுட்பம் 
அவசியம் தெரிந்து இருக்க வேண்டும்.
நாம் தொழில் செய்ய முடிவு செய்து இறங்கிவிட்டால்,
அதில் குடும்பம், நட்பு எதையும்
அதற்கு இடைஞ்சலாக வர
அனுமதிக்கூடாது.
தொழில் என்பது ஆண்மை. ஆளுமை.
அறியாதவன் நடைபிணத்திற்கு சமம்.
சமுதாயத்தில் முகம் தொலைந்து போவான்.
நிலைமையை ஏற்படுத்திக்கொண்டாலோ.
நிலைமையில் சிக்கிக்கொண்டாலோ
நீ காலத்தின் பிடியில் கைதியே...

Thursday, 22 February 2018

புகழ்

கலைஞனுக்கு பாராட்டும், 
வாழ்த்துக்களும் மட்டுமே பிடிக்கும். 
நல்ல தலைவன் இவற்றை விரும்ப மாட்டான்.
முகஸ்துதிக்கு மயங்க மாட்டான்.
மாறாக இவற்றின் பின்னால் போகும் 

தலைவனின் தொண்டர்கூட்டம் 
அவனை நம்பினால் அழிந்து போகும்.

Tuesday, 13 February 2018

எதிரியை நேசி

உறவுகள் "உச்சு" மட்டுமே கொட்டும்.
நட்புகள் நடப்புகளை விமர்சிக்கும்.
துரோகம் முதுகில் குத்தும்.
எதிரி ஒருவனே உன்னை
வெற்றிப்படிகளில்
ஏறிச்செல்ல
உந்தும் உந்துவிசை.


எதிரியென ஒருவன் இல்லையேல்
உன் முன்னேற்றம் ஆமை வேகத்தில்
மட்டுமே இருக்கும்.


Wednesday, 24 January 2018

பொருத்தமான தம்பதி


அவனோ கேடுகெட்டவன்,
நல்லவன் போல் பண்பாய் பேசி நடிப்பான்.
அவளோ அவன் கேடுகெட்ட
குணத்தை நன்கு தெரிந்தும்,
ஏதும் தெரியாதது போல்,
அவன் கூறியதை நம்புவதாய்
அவனை நம்ப வைக்கிறாள்.
இல்லறம் இனிதே செல்கிறது.
கலியுக தம்பதி...

Friday, 1 December 2017

விண்ணுலக பயணம்


முப்பாட்டன்கள் போனதாக சொன்னார்கள்.
தாத்தா, பாட்டி நன்கு விபரம் தெரியும் முன்னே சென்றார்கள்.
பெரியப்பா, பெரியம்மாவும் சென்றார்கள்.
அப்பா, அம்மா விபரம் தெரிந்த பின் சென்றார்கள்.
சித்தப்பாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.

பிறகு அண்ணன்கள்...
இடையிடையே நண்பர்கள்...
நான் நேசித்த ஒரு சில உயிரினங்கள்.

நாளை நான் மற்றும் நீ...
இது விரும்பினாலும், விரும்பா விட்டாலும்
பயணம் நிரந்தரமானது.
பிரிவு, மாற்றம் என்பது நிலையானது.
பிரிவு என்றும் நம்மை விட்டு பிரியாது.

Wednesday, 29 November 2017

பணக்கட்டு


பணக்கட்டு விழித்திருக்கும்போது,
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 

சில வழக்கு கோப்புகள் உறங்குகின்றன...
பல கோப்புகள் கோமாவிலேயே  கிடக்கின்றன.


Sunday, 26 November 2017

Thursday, 2 November 2017

பெரியகாரியம்


எத்தனையோ பெரியகாரியம் (இறந்தவர்கள் வீட்டிற்கு )
சென்றோம்.
நாம் நிரந்தரமாக உறங்கும்போது (இறந்து போதல்)
அவர்கள் யாரும் வரப்போவதில்லை...

பகலில் எரிப்பதற்கு ஒரு விலை.
மதியம் எரிப்பதற்கு அதிகம்.
இரவு எரிப்பதற்கு மிகவும் அதிகம்.
பிணத்திற்கு கூட பணம் இருந்தால்தான் மதிப்பு.

Tuesday, 3 October 2017

சாபம்


சாபம் என்பது நாம் ஒருவருக்கு செய்யும் தீங்கிற்க்கு,
அவர் வயிறெரிந்து கூறும் வார்த்தை மட்டும் சாபம் ஆகாது.
நாம் செய்யும்  பாவம் அவர் ஏதும் கூறாமல் விட்டு சென்றாலும்,
ஒரு நொடிப்பொழுது அவர் உள்ளம் துடித்தாலே போதும்.
நம் தலைமுறை அனைத்தும் துடிதுடித்து துன்பம் அனுபவிக்கும்.
அதை நாம் நெஞ்சுபதற சாகும்வரை அனுபவிக்க நேரிடும்.
இன்று பணத்தின் போதையில் எல்லாம் மயக்கமாக..., ஏளனமாக இருக்கும்.
எவ்வளவு கதறினாலும் கடவுள் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்ப்பார்.
காலம் பதில் சொ(கொ)ல்லும்போது வலி மிகவும் அதிகமாக இருக்கும்.

Thursday, 21 September 2017

என்னவள்


சுறுசுறுப்பானவள் நீ.
புத்திசாலித்தனம், 

சிலநேர சமயோஜிதமும்
உன்னிடம் என்னை வியக்க வைத்த 

விடயங்கள் பலமுறை.
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்.
 

அதனால்தானோ என்னவோ, 
நீ சில சமயத்தில் எத்தனை முறை கொட்டினாலும்,
நான் அந்த வலியில் இன்பமடைகிறேன்
.