Friday 28 October 2011

அழகு

அழகுக்கு ஆயிரம் அழிவு.
அசிங்கத்திற்கு அழிவே இல்லை.

Monday 24 October 2011

இன்றைய காதல்

இன்றைய காதல் மென்மையானது.
மெலிதானது.
பல பல உணர்வுகளை அள்ளித்தருவது.
சபலத்தில் உருவாவது.
அறியாமையில் அனிச்சையாய் வருவது.
சினிமா,பத்திரிக்கை,தொலைகாட்சி பணம் பார்க்க உதவுவது.
கையிலே வருமானம்.பையிலே பணம்.
தோன்றுகிறது தான்தோன்றித்தனம்.
வறுமை கதவை தட்டும் போது,
காதல் ஜன்னல் வழியே ஓடுகிறது.
காதலுக்குப்பின் சேர்ந்து வாழும் வாழ்கை பெரும்கடல்.
சமுத்திரத்தில் நீந்தினால் தெரியும்.
தூரமும்,ஆழமும்,ஆபத்தும் எவ்வளவு என்று.
பணத்திற்காக காதலை பயன்படுத்துவதும்
ஒரு வகையில் விபச்சாரமே.

திருமணத்திற்குமுன் காதல் மயக்கத்தில்
ஏகப்பட்ட திட்டங்கள்,ஒபந்தங்கள்.
எல்லாம் மண்ணோடு மண்ணாய்.
கற்ற கல்வி துணை என்ற ஆணவம்.
கல்வி குடுத்தது பெற்றவர்.
பெற்றவர் பெற்றது வைத்தெரிச்சல்.
அருகம்புல் அரைச்சு குடித்தாலும்,
பெரண்டையை அரைச்சு பூசினாலும் போகாது.
கற்பு என்ற ஒரு சொல்லே மீதி வாழ்க்கையை
ஒட்டிசெல்கிறது.
கற்பும் தறி கேட்டு போனால் வாழ்கையின் கதி அதோகதிதான்.

கோமாளி

எத்தனை வேதனை மனதில் இருந்தாலும் முகம் வெளிப்படுத்தாது.
மற்றவர்க்கு மன மகிழ்ச்சியையே ஏற்படுத்தும்.
உடல் ரீதியாக கண்டிப்பாக குறை இருக்கும்.(குள்ளம் மட்டுமல்ல).
நிறைய திறமைகள் இருக்கும்.
ஏமாளியாய் இருப்பதை விட கோமாளியை இருப்பதே மேல்.

Friday 21 October 2011

ஆண் பெண் சிறப்பு

மாமியார் "மருமகளே எனக்கு பேரனை பெற்றுகொடு".
அம்மாவோ எனக்கு பொண்ணுதான் வேண்டும்.
கணவனோ "எனக்கு இரட்டைக்குழந்தைகள் ".
நம் கையில் என்ன இருக்குது.எல்லாம் கடவுள் செயல்.
* ஆண் குழந்தை பிறந்தால் வாழ்வை ரசிக்கலாம் .
* பெண் குழந்தை பிறந்தால் வாழ்வை ருசிக்கலாம்.

மகனின் பேண்ட்,டி சர்ட் எல்லாம் அப்பா போட்டுகொண்டு வலம் வருவார்.
தாயின் உடைகளை மகள் அணிந்து மகிழ்ச்சி கொள்வாள்.
மேலும் போட்டிக்கு வருவாள்.
ஆண் வாரிசுக்கு உடை வகைகள் குறைவு.வாங்கி கொடுத்து ரசிக்க முடியும்.அவ்வளவுதான்.
பெண் வாரிசுக்கு உடை வகைகள்,மிக அதிகம்.தலைமுடிக்கு மாட்டும் அணிகலன்கள் முதல் காலுக்கு அணியும் செருப்பு வரை.
இன்று ரோஜாபூ, நாளை மல்லிகை, நாளை மறுநாள் முல்லை,
ஜாதிமல்லி வகை வகையாய்.
பெற்றோரின் மகிழ்ச்சி குழந்தைக்கு வகை வகையாய் அணிவித்து அழகு பார்த்து
மகிழ்ச்சியடைய
பெண் குழந்தையே கொடு இறைவா...
ஆணுக்கு எல்லாம் ஒன்றுதான்.
பெண்ணுக்கு எல்லாம் இரண்டு.
பெயர் முன் போடும் இன்சியல் ,ஜாதகம், உடை பல பல .
ஆணை விட பெண்ணே உயர்ந்தவள்.
மகளாக, மனைவியாக, மருமகளாக, தாயாக, மாமியாராக, பாட்டியாக
பெண்ணுக்கு கடமைகளும், பொறுப்புகளும் மிக மிக அதிகம்.
எதையும் தட்டிகழிக்க முடியாது. சகித்துத்தான் போகவேண்டும்.
ஆண் சாமர்த்தியமாக அனைத்திலிருந்தும் ஒதுங்க முடியும்.
வாழ்க்கைக்கடலில்
குடும்பப் படகில் கணவன். உடல் ரீதியாக வலிமைமிக்கவன்.
துடுப்பாய் மனைவி.
படகை செலுத்தியவன் அவனாக இருந்தாலும்,
அவன் பிடித்த மீன் குஞ்சுகளோடு (குழந்தைகள்)
கரைசேர உதவியவள் மனைவியே.
அவளே பெண்.
ஆண் ON ஆக இருக்க வேண்டும்.(செயல்,உழைப்பு)
பெண்
pen ஆக இருக்க வேண்டும்.(படிப்பு,எழுத்தறிவு)

Thursday 20 October 2011

உண்மை வாழ்கை

வாழ்வில் கடைசிமூச்சு வரை நம்முடன் வருவது நம் உணர்வுகள் (எண்ணங்கள்) மட்டுமே.  
அதுதான் நமக்கு இன்பத்தையும்,துன்பத்தையும் எப்போதும் தரும்.
இதுவரை எப்படியோ போகட்டும்.
இனி வருவதை சிறப்பாக்க சில சிந்தனைகள்:
* பணத்தை இழந்தால் மகிழ்ச்சியடையுங்கள்.அது விலைமதிப்பற்ற அனுபவத்தை உங்களுக்கு வழங்கியிருக்கும்.
* கேவலத்தை நினைப்பதும்,செய்வதும்,பேசுவதும்,கேவலமே.அது நமக்கு வேண்டாமே.
* உங்கள் (கடுமையான உழைப்பினால்) வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.
அது போலத்தான் மற்றவர்களுக்கும். மற்றவர்கள் வளர்ச்சியை கண்டு பொறாமை வேண்டாம். பொறாமை நம் வளர்ச்சியை ஆமை வேகத்தில் மாற்றிவிடும். முன்னேற விடாது.
* மற்றவர்களுக்கு  சந்தோஷமோ ,மகிழ்ச்சியோ நாம் ஏற்படுத்தினால் அது நமக்கு சொந்தமாகிவிடும்.
* முடிந்தவரை நன்றிக்கு பதிலாக வாழ்த்தாக,பாராட்டாக கூறுங்கள்.அது அவர்களை ஊக்கபடுத்தும்.நீங்கள் தரும் நன்றியினால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.மாறாக அது அவர்கள் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.
* இறந்த காலத்தை பற்றி பேசுவதை,நினைப்பதை விடுங்கள்.ஏனெனில் அது ஏற்கனவே இறந்து விட்டது.நம் எண்ண உணர்வுகளுள் அது உள்ளது.அது தந்த அனுபவத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
* நல்லதே பேசுங்கள்,செய்யுங்கள்.முடியவில்லை என்றால் மெளனமாயிருங்கள், எதுவும் செய்யதீர்கள். காலம் பேசும் செய்யும்.
* இனிவரும் நம் எண்ண உணர்வுகள் இனிமையானதாக  சேகரிப்போம்,சேமிப்போம்.
ஏனெனில் ஒரு மனிதனின் வாழ்நாள் சராசரியாக  36500 நாட்கள் மட்டுமே.
இந்த நாட்பொழுதில் நாம் இழப்பது அனைத்தும் ஏதோ ஒரு வடிவத்தில்,வழியில் நமக்கு வந்து சேரும்.கவலையை விடுங்கள்.
வந்ததை நினைத்து மகிழ்ச்சியுறுவதும்,போனதை நினைத்து வருந்துவதும் நம் நேரத்திற்கு வீணே.
*** ம் ஒரு மிக முக்கியமான விஷயம்.நாம் இழக்கும் நம் நேரத்தை மட்டும் நம்மால் எப்பவும் (எவ்வளவு பணம்,பொருள் கொடுத்தாலும்)திரும்ப பெற முடியாது என்பதை எப்போதும் மறக்காதீர்கள்.***                

பெண்ணாக பிறந்தால் பெருமை


தாய் ஆடு கூறியது.
எங்கள் இனத்தில் பெண்ணாக பிறந்தால் பெருமை .
அப்போதுதான் நாங்கள் வாழ முடியும்.
ஏனென்றால் எங்கள் எஜமானர் பெண் குட்டியை கசாப்புக்கு விற்க மாட்டார்.

Thursday 13 October 2011

காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம்.

காதலுக்கும் காமத்திற்கும் என்ன வித்தியாசம்.
எனக்கு நீண்ட நாள் சந்தேகம்.
நான் கண்ணில் தென் பட்ட அனைவரிடமும் கேட்டேன் வயது வித்யாசம் பாராமல். .
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில்.
என் மனதிற்கு எதுவுமே திருப்தி அளிக்க வில்லை.
காலை முதல் மாலை வரை என் கேள்வி தொடர்ந்தது.
பல பேர் பல பதில்.
கடைசியில் ஒரு நண்பர் "காமத்தின் வாட்ச்மேன் தான் காதல்" என்றார்.
இன்று நாம் கண்கூட பார்க்கிறோம்.
காதல் என்ற பெயரில்
காமம் தலை விரித்து ஆடுவதை.