Thursday 20 October 2011

உண்மை வாழ்கை

வாழ்வில் கடைசிமூச்சு வரை நம்முடன் வருவது நம் உணர்வுகள் (எண்ணங்கள்) மட்டுமே.  
அதுதான் நமக்கு இன்பத்தையும்,துன்பத்தையும் எப்போதும் தரும்.
இதுவரை எப்படியோ போகட்டும்.
இனி வருவதை சிறப்பாக்க சில சிந்தனைகள்:
* பணத்தை இழந்தால் மகிழ்ச்சியடையுங்கள்.அது விலைமதிப்பற்ற அனுபவத்தை உங்களுக்கு வழங்கியிருக்கும்.
* கேவலத்தை நினைப்பதும்,செய்வதும்,பேசுவதும்,கேவலமே.அது நமக்கு வேண்டாமே.
* உங்கள் (கடுமையான உழைப்பினால்) வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.
அது போலத்தான் மற்றவர்களுக்கும். மற்றவர்கள் வளர்ச்சியை கண்டு பொறாமை வேண்டாம். பொறாமை நம் வளர்ச்சியை ஆமை வேகத்தில் மாற்றிவிடும். முன்னேற விடாது.
* மற்றவர்களுக்கு  சந்தோஷமோ ,மகிழ்ச்சியோ நாம் ஏற்படுத்தினால் அது நமக்கு சொந்தமாகிவிடும்.
* முடிந்தவரை நன்றிக்கு பதிலாக வாழ்த்தாக,பாராட்டாக கூறுங்கள்.அது அவர்களை ஊக்கபடுத்தும்.நீங்கள் தரும் நன்றியினால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.மாறாக அது அவர்கள் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.
* இறந்த காலத்தை பற்றி பேசுவதை,நினைப்பதை விடுங்கள்.ஏனெனில் அது ஏற்கனவே இறந்து விட்டது.நம் எண்ண உணர்வுகளுள் அது உள்ளது.அது தந்த அனுபவத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
* நல்லதே பேசுங்கள்,செய்யுங்கள்.முடியவில்லை என்றால் மெளனமாயிருங்கள், எதுவும் செய்யதீர்கள். காலம் பேசும் செய்யும்.
* இனிவரும் நம் எண்ண உணர்வுகள் இனிமையானதாக  சேகரிப்போம்,சேமிப்போம்.
ஏனெனில் ஒரு மனிதனின் வாழ்நாள் சராசரியாக  36500 நாட்கள் மட்டுமே.
இந்த நாட்பொழுதில் நாம் இழப்பது அனைத்தும் ஏதோ ஒரு வடிவத்தில்,வழியில் நமக்கு வந்து சேரும்.கவலையை விடுங்கள்.
வந்ததை நினைத்து மகிழ்ச்சியுறுவதும்,போனதை நினைத்து வருந்துவதும் நம் நேரத்திற்கு வீணே.
*** ம் ஒரு மிக முக்கியமான விஷயம்.நாம் இழக்கும் நம் நேரத்தை மட்டும் நம்மால் எப்பவும் (எவ்வளவு பணம்,பொருள் கொடுத்தாலும்)திரும்ப பெற முடியாது என்பதை எப்போதும் மறக்காதீர்கள்.***                

1 comment :

Kumaresan,Erode said...

unmaiyana vaarthaigal