Tuesday 20 December 2011

விதிக்கப்பட்டது எது ?

உனக்கு விதிக்கப்பட்டது எது
என தெரியாமல் , உணராமல்
ஒவ்வொரு முறையும் ,
வீழ்ந்து ,வீழ்ந்து
இழிவு படுவது ஏன் ?
விதி உனக்கு விதிக்கப்பட்டது.
அது உன் கர்மா.
அதை உன்னால் மாற்ற முடியாது.
அதன் வழியே செல்.
வேண்டுமானால் தற்போது வாழும்
வாழ்கையில் முடிந்தவரை புண்ணியம்
செய்து நிம்மதியை பெற்று கொள்.
இதுதான் உனக்கு விதிக்கப்பட்டது.

4 comments :

Anonymous said...

விதி பற்றி தாங்கள் எழுதி இருப்பது நல்ல நேர்த்தி
ஆனால் மதி இதில் தலை இட்டால் ஒருவேளை
விதி மாறுமா?.....

அந்த மதியை உருவாக்குவதே விதி என்றால்
ஒன்றும் செய்ய முடியாது !

நன்றி
பாலா
ஈரோடு

ananthu said...

விதி வலியது ., மதியினால் விதியை வெல்லும் விதி இருந்தால் அதுவும் நடக்கும் ...!

vetha (kovaikkavi) said...

மிக நன்று. தொடருங்கள் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Joker said...

முதலில் என் மனமார்ந்த நன்றி உங்கள் அனைவருக்கும்.
என் எழுத்துக்கள் உணர்வுகளுக்குள் உறங்கி பல ஆண்டுகள் ஆகி விட்ட
நிலையில் ஏதோ என் மன சுமை பாரத்தை இறக்கி வைக்க பிறந்ததுதான்
(எதுவாவது) செய் அல்லது (காலம்) செய்துவிடும் எதுவாவது.

மண்ணோடு
மண்ணாய் மக்கி போக இருந்த துண்டு மூங்கிலை
துவாரங்கள் இடுகின்றன உங்கள் விமர்சனங்கள்.
போகும் நிலையை பார்த்தால் இனிய இசைஎழுப்பும்
புல்லாங்குழலை உருவாக்கி மேடையில் கச்சேரி
செய்யும் நிலை ஆகி விடுமோ எனவும் தோன்றுகிறது.
மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் உணர்வுகளோடு
நன்றியை பகிர்கிறேன்.