Tuesday 27 December 2011

மனித பிறவி

நான் மனிதன்.
ஆமாம் நான் மனிதன்தான்.
என்னுடையது மனித பிறவி.

எத்தனை மரம் செடி, கொடிகள் நடவு செய்திருப்பேன்.
(உண்மையில் அறுவடை அல்லவா செய்தேன்).

என்னால் பூமிக்கு எவ்வளவு நன்மை. எத்தனை உயிர்களுக்கு நான் நன்மை புரிந்திருப்பேன்.
(உண்மையா இது )

தினசரி பத்திரிக்கை,தொலைக்காட்சி ஏதோ வழியில் செய்திகள் வேண்டும்.
(நாட்டுக்கு ரொம்ப அவசியம்.இவற்றால் நாட்டுக்கு என்ன பயன்)

எனக்கு பிடிக்காவிட்டால் சிறிது கோபப்படுவேன்.
(அப்படியா? உன்கிட்ட நிஜ துப்பாக்கி இருந்திருந்தால்
எத்தனை பேர் கபாலம் காலியாகி இருக்கும்.
ஏன் உன் கபாலமே உன்னிடம் இருந்திருக்காதே.!.)
சிறிது கோபமாம்.

ஜப்பான்ல சுனாமியாம். ஐயோ பாவம்.
அமெரிக்காவுல பொருளாதாரம் பாதிப்பு. அடக்கடவுளே என் பங்குகளும் சரிந்து விட்டது.
எத்தனையோ செய்திகள். எத்தனையோ பரிதவிப்புகள்.
அந்தோ பரிதாபம்.
நான் மனிதன்.
என் மானிடப்பிறவி முடிந்தது.

என் மொழி.

தமிழ்.

இப்படி தமிழில் புலம்பத்தான் உதவுது.

தமிழுக்காக நான் என்ன செய்தேன்.
(என்ன செய்யவில்லை..?)

இலங்கை...?

முல்லைபெரியாறு...?


ஐயா,
சிறிது கோபப்படுபவரே
கோபம் வேறு. ரோஷம் வேறு.
தமிழுக்கு உதவுங்கள்.

நான் மனிதன்.
ஆமாம் நான் மனிதன்தான்.
என்னுடையது மனித பிறவி.

3 comments :

மாலதி said...

m...

Sivamjothi said...

வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம்.
நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும்.
http://sagakalvi.blogspot.com/2012/04/blog-post_03.html

Joker said...

நன்றி. தங்கள் வெளிபடையான கருத்திற்கு..