Tuesday, 8 October 2013

மன நிம்மதி

ஒழுக்கம்

பண்பு

நிறைந்த இடத்தில்

மன நிம்மதி உள்ளது.

ஆணவம்

அழிவுப்பாதையின் நுழைவாயில்.

பாதையோரம் எங்கும் வண்ண வண்ண பூக்கள்.


அதல பாதாளத்திற்கு 


வழுக்கியபடியே
 

அழைத்துசெல்லும்.

அதனால்தானோ என்னவோ 

அழியப்போவது உணராமல் 

ஆணவத்தையே கட்டித்தழுவி வாழ்கிறார்கள் சிலர்.

Tuesday, 3 September 2013

என் இனிய மரணமே

எனக்கு மட்டுமே சொந்தமான

                                  என் மரணமே,                                             

உன் மீது தீராத என் காதல், உனக்கு புரியவில்லையே.

என் மீது உனக்கு அப்படி என்ன கோபம்.

என் கண்ணில் சிக்காமல் ஓடி ஒளியாதே.

நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள்.

இந்த  உலகத்தில் யாராலும் உன்னையும் என்னையும்
பிரிக்க முடியாது.

பலமுறை காலம் உன்னோடு சேர்ந்து
வாழ சொன்ன போது நான் உன்னை
அலட்சியப் படுத்திவிட்டேன்.


என்னை மன்னித்துவிடு. என் உயிரின் உறவே.

உன்னுடன்  உடனடியாக நான் இணைய வேண்டும்.

மனதில் உன்னை சந்திக்க மிகுந்த
ஆவலோடு காத்திருக்கிறேன்.

எவ்வளவு தூரம் எனை விட்டு ஓடுவாய்.

இன்று இல்லாவிட்டாலும் நீ ஒரு நாள் என்னோடு
சேர்ந்தேயாக வேண்டும்.

எனக்கு ஏதாவது என்றால் உன்னால் தாங்க முடியுமா?

ஓடாதே.என் உயிர்க்காதலியே

இளமை கரைகிறது.

துடிக்கிறேன் வா.

என் கண்மணியே.... 

Thursday, 8 August 2013

தாய்ப்பாசம்

                                           


தான் பெற்ற குட்டிகளுக்கு
நாய் காட்டும் பாசம் கூட இன்றைய மனித
குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் கிடைப்பதில்லை.


மிக கூர்ந்து ஆராய்ந்து பார்த்ததில் 

 
பணத்திற்கு ஆசைப்பட்டு சிசேரியன் செய்யும்
ஒரு சில மருத்துவர்களும்


அரைகுறையாக படித்து பட்டம் பெற்று
பயத்தில் சுகப் பிரசவத்தையும்

சிசேரியன் மூலம் வைத்தியம் செய்தவர்களும்,

நல்ல நேரத்தில் குழந்தை ஜனிக்க வேண்டும் என
இறைவன் குறித்த நேரத்திற்கு முன்பாகவே
சிசேரியன்  மூலம் குழந்தைப்பெறுவது


இவற்றால் உண்மையான தாய்ப்பாசம்
பட்டுப்போகிறது.


சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றவள்
அவள் உயிரை பணயம் வைத்து பெற்றதினால்
தன் குழந்தையிடம் உயிரையே வைக்கிறாள்.
குழந்தைக்காக பதறிப்போகிறாள்.


நோகாமல் குழந்தை பெற்றவள் குழந்தையிடம்
எரிந்து விழுந்து அதன் அருமை
புரியாமல் உணராமல்
அதன் பிராணனை வாங்குகிறாள்.


கண்டிப்பாக இருப்பதாக நினைத்து ஓவராக அதட்டி பந்தா விடுகிறாள்.
 

அப்பன் விதைக்கிறான்.
அம்மா தாய்ப்பாலோடு 
தேசப்பற்று ,பாரம்பரியம்,கலாச்சாரம் ,
போதிக்க கடமைப்பட்டவள்.
ஆனால் இன்று தவறாக குழந்தை வளர்க்க
காரணமாகிறாள். 

Wednesday, 24 July 2013

மனித வாழ்க்கை

மனித வாழ்க்கையில் ஒரு மண்ணும் இல்லை.
ஒரே ஒரு உபயோகமான விஷயம் தவிர.
கடவுளை நன்கு பக்தி சிரத்தையோடு அணுகி ,
நாலு பேருக்கு நன்மைகள் செய்து ,
நம் தாயை பெற்றெடுத்த மண்ணின் உயிர் காக்க
நாலு மரம் நட்டுவிட்டு

சுடு(ம்)  காட்டுக்கு
குளிர்ந்த
இதயத்தோடு செல்வதே.....
இந்த பிறவியின் பயன்.

Friday, 14 June 2013

தனதானே தனதானே


தனதானே தனதானே

பிறப்பெடுத்தது செய்த பாவத்தின் கருமத்தைக் கழிக்கத்தானே
 
தனதானே தனதானே
 
புரியாமல் மேலும் நிறைய பாவங்கள் செய்தனனே
 
தனதானே தனதானே
 
பலியாடாய் பலநூறு முறை தலை கொடுத்தேனே
 
தனதானே தனதானே
 
நெஞ்சு பதறுதே பாவிகள் முதுகில் குத்தும்போது
 
தனதானே தனதானே
 
பாசம் , நேசம் அனைத்தும் அறுத்தனனே
 
தனதானே தனதானே
 
கோமாளியாய் வெளி வேஷத்தில் சிரித்தாலும்,
 
உள்ளுர அழுதனனே
 
தனதானே தனதானே
 
காதிலே காய்ச்சிய ஈயத்தை ஊற்றும் போது
 
தனதானே தனதானே
 
உணர்வுகள் பூமியிலேயே எண்ணைக் கொப்பரையில் பொரித்தனனே
 
தனதானே தனதானே
 
வாழும் கடவுள் ,துடிக்கும் என்னை அழைக்கிலையே
 
தனதானே தனதானே
 
உந்தன் பாதம் சரண் அடைந்தேன் மேலும் பாவங்கள் செய்யும்முன்
 
அழைத்துக் கொள்ளேன்.எனைப்படைத்த கடவுளே....
 
தனதானே தனதானே Tuesday, 28 May 2013

பணம்

எண்ணும்போதே சேமிக்கநினை

பணம் சம்பாதிக்க பல நூறு வழிகள்.
அதில் நேர்மையானவைகள் சில பத்து வழிகள்.
அதிலும் எதிர்பாராமல் நாம் நினைத்ததைவிட
அதிகமாகவே வரவு.
எப்படியாயினும் வந்த பணத்தை இருக்கி பிடித்து
சேமிக்காமல் போனால்....
காலம் நம்மை கந்தலாக்கும்.
பணம் நம்மைப் பார்த்து பல்லிளிக்கும்.

காலச்சக்கரம்

நம்மைச் சுற்றி நாம் விரும்பாத
நிகழ்வுகள்.
மௌனத்தை அதிகப்படுத்தி,
அதை மேலும் புனிதமாக்க
இறையருளை நாடி கோவிலுக்குள்
தஞ்சம்.
காலச் சக்கரத்தின் வேகத்தோடு ஈடு
கொடுத்துச் செல்ல நல்ல வழி.

Saturday, 25 May 2013

வீரத்திருமகள்மதிப்புமிக்க சகோதரிக்கு,
எத்தனையோ புத்தகங்கள்,
எத்தனையோ தத்துவங்கள்,கவிதைகள்
எத்தனையோ கருத்துக்கள்.
இன்று மக்கள் பொழுதுபோக்கு அம்சம்
நிறையவே உள்ளதால்,
மக்களும் வேகமாக...

புத்தகம் படிக்க சோம்பேறித்தனம் ஒரு சிலருக்கு.

எதற்கும் உதவாத உறவுகள் ஒரு சிலருக்கு.

ஆதாயத்தையே எதிர்பார்த்து பழகும் நண்பர்கள் ஒரு சிலருக்கு.

இதனிடையே முகம் தெரியாத உள்ளம் பகிரும் உணர்வுகள்
அதுவும் கவிதையாய் எத்தனையோ உள்ளங்களை கொள்ளை கொண்டு
உரிமையோடு கருத்திடும் நல்ல நெஞ்சங்கள்  வலைதளத்தின் வாயிலாக,

அனைவரும் ஏக்கம் அடைவார்கள் நல்ல கவிதைகளை (சு)வாசிக்க முடியாமல்.

எண்ணம் ஒரு நிலையில் இருந்தால் மட்டுமே உணர்வான கவிதைகள் தோன்றும்.

தங்களின் கவிதை படைப்புகள் காலத்தை வெல்லக்கூடியவை.
தங்கள் பலம் தங்களுக்கு புரியாமல் போனது துரதிஷ்டவசமானது.

விதவைத்தாயை  வெளியே எங்கு அழைத்தாலும் தட்டிக்கழித்ததும்,
கோவிலில் தாயை குருக்கள் புறக்கணிப்பதை புரியாமல் போனதும்,
மாந்தர்தனை சமுதாயம் எப்படியெல்லாம் பாடுபடுத்துகிறது என்பதை
புரிந்தபோது


வீறுகொண்டு சீறி எழுந்து தைரியமாக உணர்வுகளை
கவிதையாய் அக்கினி எழுத்துக்களை விதைக்கும் ஒரு ஜான்சி ராணியாய்
தங்களின் படைப்புகளை காண முடிந்தது.மனதில் மட்டற்ற மகிழ்ச்சி.
என்னைபற்றி என்னத்தைச்சொல்ல என்பதில் ஆரம்பித்து எத்தனையோ எத்தனையோ சொல்லியாச்சு.இன்னமும் சொல்ல வேண்டியது எத்தனையோ..?
விடைபெற வேண்டாமே...முடமாகிய உள்ளத்திற்கு ஊன்றுகோல்
கொடுத்து மீண்டும் நிமர்ந்து எழவைக்கும் தன்மை எத்தனை பேருக்கு
முடியும்.
இறைவன் கொடுத்த வரத்தை நாம் தடுக்கலாமா? தயை கூர்ந்து
தாங்கள் மீண்டும் எழுத வேண்டும் சகோதரி.எந்த வகையான துன்பத்தையும்
எதிர்கொள்ளும் அனைத்து திறமைகளும் கொண்டவர் தாங்கள். தற்பெருமை,முகஸ்துதிக்கு மலுங்காதவர்.
உணர்வான எழுத்துக்களை நுகர்ந்து உள்வாங்கும் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த உண்மை தெரியும்.
நிறைவாக..
பேரும் வேண்டாம்.
புகழும் வேண்டாம்.
ஜாதியும் வேண்டாம்.
மதமும் வேண்டாம்.
உணர்வுகளை படைப்போம்.
அதன்மூலம் மனதை மேம்படுத்துவோம்.
மேம்பட்ட மனம் மூலம் சமுதாயத்தை முடிந்தவரை
மாற்றியமைப்போம்.
முடியாமல் போனால் ஆறுதல் படுத்துவோம்.
துடிப்புமிக்க வீரமான புரவியும், புதியதாய் தணலில் இருந்து சம்மட்டியில்
அடி வாங்கி மிக கூர்கொண்ட வீரவாளும் காத்திருக்க புறப்படு சகோதரி.
குறைவான நேரமே... நிறைய எழுத வேண்டும்.
சரித்திரத்தை திக்குதோறும் கொண்டாட...


 

Tuesday, 21 May 2013

உபத்திரவம்

உபகாரம் செய்பவர்களுக்கு
தொடர்ந்து உபத்திரவம்
கொடுத்தால்
என்றாவது ஒரு நாள் கடும்
விரயத்தை சந்திக்க நேரும்.

Monday, 22 April 2013

வாழ்க்கைப் பயணம்

உடைந்த துடுப்புடன்,
ஓட்டை படகில் ,


மனைவி,குழந்தையுடன்
 எப்படியேனும் கரையேற,


கடும் புயலையும் பாராமல்
நாடி நரம்பில் முறுக்கம் உள்ளவரை
 

வாழ்க்கைப் பயணம். 

Thursday, 4 April 2013

காதல் பிரசவம்காதலை வெளிப்படுத்தும் போது இருந்த 
              பரவசமான பயம்,
 

காதலை தடுக்கவரும் வில்லன்களை எதிர்க்க 
              காத்திருந்த வீரம்,
 

தலைப்பிரசவத்தின் போது மருத்துவர் கையெழுத்து வாங்கும்போது            
               நடுங்கிய கைகள்,
 

சரிவர பேசாத, பழக்கம் இல்லாத மாமியாரும் காத்திருக்கும் போது 
                உறுத்திய குற்ற உணர்வுகளும்,

பிரசவமாகி மனைவியாகிய காதலியை பார்க்கும்வரை 
                தளர்ந்த கால்களும்,வரண்ட நாக்கும், படபடத்த  நெஞ்சும்,

மனைவியையும்,குழந்தையையும் ஆரோக்கியமாக பார்த்த பொழுது 

                                        
காதல் பிரசவித்த காதல் 


ஆனந்த கண்ணீ ரின் இடையே கடவுளாக தெரிந்தது. 

Sunday, 17 March 2013

சபலம்

நொடி நேர சலனத்தில் வரும் சபலம்,
வாழ் நாள் முழுவதும் முன்னேற்றத்தை சறுக்கி விடுகிறது.

ஆத்மா

ஆத்மாவின் வேதனையை அலட்சியப்படுத்தாதே.
அது உன்னை துன்பத்தில் தள்ளிவிடும்.

யோசித்து செய்

யோசிக்காமல் செய்தவை ,
யோசிக்காமல் செய்துவிடும்.

நரகம் அற்பம்

தினமும் நரகம் .
பழகிப்போனதால் அதுவே
சொர்கமாகிப்போனது.