Saturday, 26 November 2022

குழந்தை வளர்ப்பு


 

12 முதல் 14 வயதிற்குள் குழந்தை தனது வேலைகளும், வீட்டு  வேலைகளும் யாரையும் எதிர்பார்க்காமல் தானே செய்து கொள்ளும் வகையில் பெற்றோர்கள் தயார் படுத்த வேண்டும்.
 

உலகத்திலே யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் உங்கள் குழந்தை.
 

அதற்காக அதிகம் செல்லம் கொடுத்தால்,

நாளை உங்கள்  குழந்தை சமுதாயத்தில் செல்லாக்காசாகி விடும்.
இனவிருத்தி செய்ய சொல்லிக்கொடுக்கும் திரைப்படங்களும், தொ(ல்)லைக்காட்சி தொடர்களும், அதை பெறுவதற்கு முன்பே அதை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தினால் மட்டுமே ஊர் உருப்படும்.

Monday, 24 October 2022

முட்டாள்தனம்

 

முட்டாள்தனம், ஏமாளித்தனம் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.

முட்டாள்தனம் செயல்பட நம்பிக்கைத் துரோகம் மூலதனமாகிறது.

ஏமாளித்தனம் செயல்பட அன்பு மூலதனமாகிறது.

தகுதியற்றவர்களிடம் நாம் செலுத்தும் நம்பிக்கை, அன்பு
இரண்டுமே இவைகளை நமக்கு பரிசாக அளிக்கின்றன.

தீர்வு:
இந்த நொடியின் நடப்பு,
எனது கர்மாவின் செயல்
என ஏற்றுக்கொள்வதுதான்.