Thursday, 7 November 2019

ஆண்கள் உயர்ந்தவர்கள்




பெண்களைவிட ஆண்
மிகவும் உயர்ந்தவர்கள்.
ஒரு விஷயத்தில்,
அதிகம் அழுதாலும்,
அவன் கண்களில் கண்ணீர் வருவதில்லை.

Sunday, 6 October 2019

கடவுளின் கணக்கு


நாடி,நரம்பில் முறுக்கம்,
கை நிறைய காசு.
ஆணவத்தின் உச்சிக் கிளையில்
மாபெரும் ஆட்டம்.
இளமையில் ஆடும் ஆட்டம்
முதுமையில் தண்டனை வழங்குகிறது.
ஆண்டவன் போடும் முடிச்சை
அவரால் மட்டுமே அவிழ்க்க முடியும்.

Wednesday, 22 May 2019

முதுமை


இளமையிலே சேமிக்காத பணம்
தண்ணீர் இல்லாத கிணறு போல்
வாழ்க்கை பயனற்றதாகி விடுகிறது.
முதுமையில் உறவென்று கூட்டமாய்
காக்கைகள் கூடாது.
முதுமை கொடியதாகி விடுகிறது.

Saturday, 27 April 2019

இதுவும் ஒரு வகையான தியாகம்தான்

நான் வாழ வேண்டும் என நினைத்தால்,
எனக்கு துரோகம் இழைத்த பல பேர் நடுத்தெருவில்
நிற்க வேண்டி வரும்.
அதனால்தானோ என்னவோ நான் நடைபிணமாகவே
மரிக்க நினைக்கின்றேன்.

Tuesday, 9 April 2019

கர்மாவின் வேலை


விஷநாகம் கொத்தினால் விஷமே.
நல்லபாம்பாக இருந்தாலும் சரி,
ராஜ நாகமாக இருந்தாலும் சரி,
அது விஷம்தான்.
நாகம் என தெரிந்தே கழுத்தில் போட்டுக்கொண்டு
ஆட்டம் போட்டால் உன் கதி அதோ கதிதான்.
கர்மா அதன் வேலையை நன்றாக செய்யும்.

Tuesday, 5 March 2019

நகைச்சுவையின் முடிவு


நகைச்சுவை நடிகர் என்று
மற்ற நகைச்சுவை நடிகரைபோல்
நடிக்க ஆரம்பிக்கிறாரோ
அன்றே அவரிடம் நகைச்சுவை
தீர்ந்துவிட்டது என
பொருள்.