Friday, 13 January 2012

ஆஸ்துமா




மானிடபிறவி ஒன்று விதி முடிந்து எமலோகம் வந்தது.

அங்கு
..


எமதருமராஜா
:
"சித்திரகுப்தா
இந்த ஆத்மா செய்த பாவங்கள் என்ன ?.
படி" என்றார்.


சித்திரகுப்தன்:
"தருமராஜா
ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளன இவர் பெயரில்.
இவர் செய்த பாவங்கள் கணக்கில் அடங்காதவை.நீங்களே பாருங்கள்" என்று அனைத்து புத்தகங்களையும் காட்டினார்.

எமதருமராஜா
:

அனைத்தையும் பார்த்த எமதர்மராஜா உடனடியாக
"இந்த ஆத்மாவை நான் மீண்டும் மானிடனாக படைக்க உத்தரவிடுகிறேன்" என்றார்.

சித்திரகுப்தன்
:
"அரசே
அரிது அரிது மானிடனாக பிறத்தல் அரிது என்பது
தங்களுக்கு தெரியாதா?.
அப்படிப்பட்ட பிறவியை இந்த ஜீவனுக்கு
நீங்கள் தந்தால் தவறான நீதி தந்தவர்களாவீர்.
உங்கள் தருமம்
போய்விடுமே".

எமதருமராஜா
:

"சித்திரகுப்தா
நான் மானிடப்பிறவியோடு
ஆஸ்துமா நோயையும் கொடுக்கப்போகிறேன். இந்த ஜீவன் வாழ வேண்டும் என நினைக்கும். ஆனால் வாழ முடியாது. சாக வேண்டும் என நினைக்கும். ஆனால் சாவு வராது. இழுத்து, இழுத்து, இழுத்து, இழுத்து மூச்சுக்காக பூமியிலேயே நரகத்தை அனுபவிக்கும். இது நம் நரகத்தை விட கொடுமையாக இருக்கும். எப்படி நம் தண்டனை?".

சித்திரகுப்தன்
:

"மன்னா
! ஒரு வேளை இந்த ஜீவன் மருத்துவம் பார்த்து
தப்பித்து விட்டால்"?

எமதருமராஜா:
"மருத்துவத்தால்
தள்ளிப்போடலாம்.

முழுமையாக குணப்படுத்த முடியாது.
யோகா,பிராணயாமம்,நல்ல பழக்கவழக்கம், லாகிரி வஸ்துக்கள் இல்லாமை போன்றவற்றால் இந்த நரக வேதனையில் இருந்து விடுபடலாம். ஆனால் இந்த ஜீவன்களுக்கு தெரிந்தாலும் செய்யாது. நரக வேதனையை அனுபவித்து உயிரை விடும்".

***ஆஸ்துமா
தொட்டால் ஒட்டிக்கொள்ளாது.
***
***ஆஸ்துமா
இரத்த சம்பந்தத்தால் வருவது.***

***இவர்கள்
இரத்ததானம் தரக்கூடாது.
***
***இவர்களுக்கு பரிவும்,பாசமும் அவசியம் தேவை. ***
***இவர்கள்
கடும் மகிழ்ச்சியோ, மன உளைச்சலோ
அடையக்கூடாது.***


ஏனெனில்
இவர்கள் ஏற்கனவே நரகத்தை அனுபவிப்பவர்கள்.

Thursday, 12 January 2012

காசில்லாதவன்

நம்பி ஏமாந்தது காசில்லாதது ஆகிறது.
காசில்லாதது குடும்பம் அதை மதிப்பதில்லை.
குடும்பம்
அதை மதிக்காததால்
அது தரித்திரம் அடைகிறது.

"தரித்திரம் பிடித்ததை கட்டிக்கிட்டு ஏமாந்து போய்டேன் "

என்ற சொல்லும் கிடைகிறது.
பழையது மறக்கிறது.
புதியது கண்ணை மறைகிறது.
ஏமாந்தது
யாரும் அல்ல.
ஏமாத்தியது விதி.
அதுவே கர்மா.....

Monday, 2 January 2012

தவறு

அழிந்தவைகளைக் கண்டு
அழியாதவை
அழிகின்றன.

(விடலைகள் இணையதளத்தின்
பயன்பாட்டை அறியாமல்,
புரியாமல்,உணராமல்
தவறாக பயன் படுத்துவதை
குறித்த குறிப்பு.)

நீர்க்குமிழி



வெளியில் இருந்த காற்றை உள்வாங்கி

சிறிது
நேரத்துக்குள் எத்தனை

ர்
ஜாம்.

உன் நேரம் முடிந்ததும்
மீண்டும் காற்றோடு காற்றாய்....

நீயும் என்னை போல்தானா..?

Tuesday, 27 December 2011

மனித பிறவி

நான் மனிதன்.
ஆமாம் நான் மனிதன்தான்.
என்னுடையது மனித பிறவி.

எத்தனை மரம் செடி, கொடிகள் நடவு செய்திருப்பேன்.
(உண்மையில் அறுவடை அல்லவா செய்தேன்).

என்னால் பூமிக்கு எவ்வளவு நன்மை. எத்தனை உயிர்களுக்கு நான் நன்மை புரிந்திருப்பேன்.
(உண்மையா இது )

தினசரி பத்திரிக்கை,தொலைக்காட்சி ஏதோ வழியில் செய்திகள் வேண்டும்.
(நாட்டுக்கு ரொம்ப அவசியம்.இவற்றால் நாட்டுக்கு என்ன பயன்)

எனக்கு பிடிக்காவிட்டால் சிறிது கோபப்படுவேன்.
(அப்படியா? உன்கிட்ட நிஜ துப்பாக்கி இருந்திருந்தால்
எத்தனை பேர் கபாலம் காலியாகி இருக்கும்.
ஏன் உன் கபாலமே உன்னிடம் இருந்திருக்காதே.!.)
சிறிது கோபமாம்.

ஜப்பான்ல சுனாமியாம். ஐயோ பாவம்.
அமெரிக்காவுல பொருளாதாரம் பாதிப்பு. அடக்கடவுளே என் பங்குகளும் சரிந்து விட்டது.
எத்தனையோ செய்திகள். எத்தனையோ பரிதவிப்புகள்.
அந்தோ பரிதாபம்.
நான் மனிதன்.
என் மானிடப்பிறவி முடிந்தது.

என் மொழி.

தமிழ்.

இப்படி தமிழில் புலம்பத்தான் உதவுது.

தமிழுக்காக நான் என்ன செய்தேன்.
(என்ன செய்யவில்லை..?)

இலங்கை...?

முல்லைபெரியாறு...?


ஐயா,
சிறிது கோபப்படுபவரே
கோபம் வேறு. ரோஷம் வேறு.
தமிழுக்கு உதவுங்கள்.

நான் மனிதன்.
ஆமாம் நான் மனிதன்தான்.
என்னுடையது மனித பிறவி.

Tuesday, 20 December 2011

விதிக்கப்பட்டது எது ?

உனக்கு விதிக்கப்பட்டது எது
என தெரியாமல் , உணராமல்
ஒவ்வொரு முறையும் ,
வீழ்ந்து ,வீழ்ந்து
இழிவு படுவது ஏன் ?
விதி உனக்கு விதிக்கப்பட்டது.
அது உன் கர்மா.
அதை உன்னால் மாற்ற முடியாது.
அதன் வழியே செல்.
வேண்டுமானால் தற்போது வாழும்
வாழ்கையில் முடிந்தவரை புண்ணியம்
செய்து நிம்மதியை பெற்று கொள்.
இதுதான் உனக்கு விதிக்கப்பட்டது.

Monday, 19 December 2011

இதயம்


இரும்பால் செய்தால்
துரு பிடிக்குமென

மரத்தால் செய்தால்
உளுத்து போகுமென

கல்லால் செய்தால்
உடைந்து போகுமென

எதையும் தாங்க வேண்டுமென சதையால் இதயத்தை படைத்த
இறைவா உனக்கு நன்றி.

Wednesday, 14 December 2011

உதடுகள்


இரு உதடுகளையும்

மேலேயும்

கீழேயும்

இரு பக்கவாட்டிலும்


விரித்து
பற்களை
காட்டினால்...

நாய்க்கு வெறுப்பின் அறிகுறி.

மனிதனுக்கு மகிழ்ச்சியின் அறிகுறி.

Tuesday, 13 December 2011

எங்கள் ஒற்றுமை

ஜாதி, மதம், இனம், மொழி
மற்றும் பல பல காரணங்களால்
எத்தனை கசப்புகளோடு
வாழ்ந்திருந்தாலும்
எல்லோரும்
ஒற்றுமையாய்
காலமானார், கண்ணீர் அஞ்சலி
பகுதிகளில்....

Thursday, 8 December 2011

நிம்மதி

நிலைமையை
ஏற்படுதிக்கொண்டாலோ ,

நிலைமையில்
மாட்டிக்கொண்டாலோ ,

நிம்மதியை இழப்பாய்....

விதி

அதிகாரத்தின்
ஆதிக்கத்தில்
விதி
செயல்படுகிறது.

Tuesday, 29 November 2011

கீழ்த்தரமானவர்கள்

மற்றவர்களுக்கு துன்பமோ, மன உளைச்சலோ,வேதனையோ
ஏற்படும் என தெரிந்தும் அந்த செயலை செய்பவர்களே,
கீழ்த்தரமானவர்கள்.அவர்களையே ஆங்கிலத்தில்
LOW Class என்பர்.

Monday, 14 November 2011

தமிழ்

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது.
அதைவிட அரிது இந்தியனாய் பிறப்பது அரிது.
அதைவிட அரிது தமிழனாய் பிறப்பது அரிது.
உலகத்தில் இந்திய மண்ணில் பிறந்த அனைவருமே
ஏதோ ஒரு வழியில் விஞ்ஞானிகளே.
தமிழன் எப்போதும்
ஏதோ ஒரு வழியில்
சிறப்பு மிக்கவன் ஆகிறான்.
மதத்தின் பின் போக மாட்டான்.
என்ன தமிழுக்காக போராட மாட்டேன்
என்று இருப்பது தான் சற்றே......

Saturday, 12 November 2011

அவள் இவள்



அவளும், இவளும் ஒன்னு

அறியாதவன்

வாழ்கையில் மண்ணு.

Thursday, 3 November 2011

தொ(ல்)லைக்காட்சி


கட்டுனவன்
கட்டைல
போனாலும்
கட்டாகாம
ஓடினால் போதும்.
நம் நேரத்தை தின்பதில் முக்கிய வைரஸ்.

நெருக்கம்

பணக்காரனிடமும், கடவுளிடமும்
அளவோடு
உறவோடு இரு.
அதிகம்
நெருங்கினாலும் , விலகினாலும் ஆபத்தே!.