Tuesday, 24 April 2012

140 வயது வாழும் ரகசியம்

எங்கேயோ எப்போதோ படித்த ஞாபகம்.
ஒரு ஊரில் ஒரு வயதான முதியவர் வாழ்ந்து வந்தார்.
அவர் தனது 140 வது வயதில் தன் மகனிடம் ஒரு சிறிய பெட்டியை
தந்து இதில் 140 வயது வாழும் ரகசியத்தை நான் எழுதி வைத்துள்ளேன்.
 நான் இறந்தவுடன் இந்த பெட்டியை ஏலம் விட்டு அதில் வரும்
வருமானத்தை நல்ல காரியங்களுக்கு பயன் படுத்துமாறு உத்தரவிட்டு
இறந்தார்.மகனும் தன் தந்தையின் சிறிய பெட்டியை ஏலம் விட்டார்.
நல்ல விலையில் ஏலம் போனது.பெட்டியை வாங்கியவர் அதை
திறந்து பார்த்தார்.அதில்
"உச்சந்தலையை குளிர்ச்சியாகவும்,
உள்ளங்காலை கதகதப்பாகவும் வைத்திருந்தால் 140 வயது வரை
வாழலாம்
"     

Friday, 30 March 2012

ஆத்மாவின் உரைகள்

உணர்வால் உயிர்ப்பித்து
உள்ளதால் எந்த பலனும்
எதிர் பார்க்காமல்,அடக்கத்துடனும்,
பணிவுடனும் வாழ்ந்தால் மரியாதையும்
மதிப்பும் தன்னால் வந்து ஒட்டிக்கொள்ளும்.

பாசம்/கோபம்

அதிகமாக பாசம் வைத்தால் கண்டிப்பாக
ஒரு நாள் வழுக்கிவிடும்.ஹெல்மெட் போட்டிருந்தாலும்

மண்டையும்,இதயமும் நொறுங்கிவிடும்.
அதிக கோபம் ஒரு வகையான வெறி நோய்.
இது வெறி நாய் கடித்து வரும் நோயை விட கொடுமையானது.
இதைதான் படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார்
"அதிகமா ஆசைப்படற ஆம்பிள்ளையும்,
அதிகமா கோபப்படுகிற பொம்பளையும்
நல்ல வாழ்ந்ததா சரித்திரமே இல்ல " பன்ச் சொன்னாரோ !.

Sunday, 18 March 2012

வாய்க்கரிசி

பசி பசி என அலறி துடிதுடித்து இறந்தவனுக்கு,
எல்லா உறவினர்களும் ஒற்றுமையாய்
அரிசி போட்டனர் அவன் வாயில்.
அவன் இருக்கும் வரை அவன் சொத்தை ஏமாற்றித்தின்ற
பிணந்தின்னிக்களுகுகள்.

Tuesday, 13 March 2012

சக்கரச்சுழற்சி

முடியும் நேரத்தில் தொடக்கத்தை தேடுவது,
தொடங்கியதும் (தொடங்கியதே தெரியாமல்) விரைவாக முடிவைத் தேடுவது,
இடைப்பட்ட நேரத்தில் மற்றவர்களை சுழலவைப்பது.
சுழற்சியில் மாட்டுவது.முடிந்தால் தப்பிப்பது.
முடியாவிட்டால் சுழன்று சுழன்று அல்லல்படுவது.
இறை அருள்ளாலும்,
மூதாதையர்,நல்லோர்,பெரியோர் ஆசியினாலும்
கரையேறுதல் நடைபெறுகிறது.
வாழ்க்கைச்சக்கரம் சுழற்சியில் ஏமாந்தால்
வலுக்குமரமாகிவிடும்.

Saturday, 3 March 2012

கலியுக மன்னர்கள்

கசாப்பு கடைக்காரர் ஒரு ஒரு உயிராக போகடிக்கிறார்.
ஆனால் மரம் வெட்டுபவரோ
பல எதிர்கால தலைமுறைகளுக்கு சவக்குழி தோண்டுகிறார்.
மரமே பூமிக்கு அஸ்திவாரம்.
இருவருமே தன் தொழிலை வயிற்றுப் பொழப்புக்காக
செய்வதாக நியாயப்படுத்துகின்றனர்.
தன் வயிற்றுக்காக பெரும் பாவம் செய்யும் இவர்கள்
கலியுக மன்னர்கள்.

Tuesday, 21 February 2012

மொழியிலா மொழி


எத்தனை எத்தனை இனத்தவர்கள்.
எத்தனை எத்தனை மதத்தினவர்கள்.
நீ சொல்வது அவனுக்கு புரியவில்லை.
அவன் சொல்வது உனக்கு புரியவில்லை.
தமிழ் நாட்டிலேயே எத்தனை வகையான
தமிழ் உச்சரிப்புகள்.
ஆங்கிலத்திலும் நாட்டிற்கு நாடு
எத்தனை உச்சரிப்பு மாறுதல்கள்.
அனைத்தையும் வீறுகொண்டு வீழ்த்தும் மொழிகளில் ஒன்று...
ஓவியம்.
ஓவியத்திற்கு மொழியே தேவையில்லை.
அது மொழியில்லா மொழி.
உணர்வுகளுக்குள் ஊடுருவும் சக்தி கொண்டது.

Monday, 6 February 2012

பழிக்குப்பழி

பழிக்குப்பழி வாங்க வேண்டும்
என்ற எண்ணம் வரும் போதே
நாம் பலியாகும் நேரம் வந்து விட்டது
என பொருள்.

Friday, 13 January 2012

ஆஸ்துமா




மானிடபிறவி ஒன்று விதி முடிந்து எமலோகம் வந்தது.

அங்கு
..


எமதருமராஜா
:
"சித்திரகுப்தா
இந்த ஆத்மா செய்த பாவங்கள் என்ன ?.
படி" என்றார்.


சித்திரகுப்தன்:
"தருமராஜா
ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளன இவர் பெயரில்.
இவர் செய்த பாவங்கள் கணக்கில் அடங்காதவை.நீங்களே பாருங்கள்" என்று அனைத்து புத்தகங்களையும் காட்டினார்.

எமதருமராஜா
:

அனைத்தையும் பார்த்த எமதர்மராஜா உடனடியாக
"இந்த ஆத்மாவை நான் மீண்டும் மானிடனாக படைக்க உத்தரவிடுகிறேன்" என்றார்.

சித்திரகுப்தன்
:
"அரசே
அரிது அரிது மானிடனாக பிறத்தல் அரிது என்பது
தங்களுக்கு தெரியாதா?.
அப்படிப்பட்ட பிறவியை இந்த ஜீவனுக்கு
நீங்கள் தந்தால் தவறான நீதி தந்தவர்களாவீர்.
உங்கள் தருமம்
போய்விடுமே".

எமதருமராஜா
:

"சித்திரகுப்தா
நான் மானிடப்பிறவியோடு
ஆஸ்துமா நோயையும் கொடுக்கப்போகிறேன். இந்த ஜீவன் வாழ வேண்டும் என நினைக்கும். ஆனால் வாழ முடியாது. சாக வேண்டும் என நினைக்கும். ஆனால் சாவு வராது. இழுத்து, இழுத்து, இழுத்து, இழுத்து மூச்சுக்காக பூமியிலேயே நரகத்தை அனுபவிக்கும். இது நம் நரகத்தை விட கொடுமையாக இருக்கும். எப்படி நம் தண்டனை?".

சித்திரகுப்தன்
:

"மன்னா
! ஒரு வேளை இந்த ஜீவன் மருத்துவம் பார்த்து
தப்பித்து விட்டால்"?

எமதருமராஜா:
"மருத்துவத்தால்
தள்ளிப்போடலாம்.

முழுமையாக குணப்படுத்த முடியாது.
யோகா,பிராணயாமம்,நல்ல பழக்கவழக்கம், லாகிரி வஸ்துக்கள் இல்லாமை போன்றவற்றால் இந்த நரக வேதனையில் இருந்து விடுபடலாம். ஆனால் இந்த ஜீவன்களுக்கு தெரிந்தாலும் செய்யாது. நரக வேதனையை அனுபவித்து உயிரை விடும்".

***ஆஸ்துமா
தொட்டால் ஒட்டிக்கொள்ளாது.
***
***ஆஸ்துமா
இரத்த சம்பந்தத்தால் வருவது.***

***இவர்கள்
இரத்ததானம் தரக்கூடாது.
***
***இவர்களுக்கு பரிவும்,பாசமும் அவசியம் தேவை. ***
***இவர்கள்
கடும் மகிழ்ச்சியோ, மன உளைச்சலோ
அடையக்கூடாது.***


ஏனெனில்
இவர்கள் ஏற்கனவே நரகத்தை அனுபவிப்பவர்கள்.

Thursday, 12 January 2012

காசில்லாதவன்

நம்பி ஏமாந்தது காசில்லாதது ஆகிறது.
காசில்லாதது குடும்பம் அதை மதிப்பதில்லை.
குடும்பம்
அதை மதிக்காததால்
அது தரித்திரம் அடைகிறது.

"தரித்திரம் பிடித்ததை கட்டிக்கிட்டு ஏமாந்து போய்டேன் "

என்ற சொல்லும் கிடைகிறது.
பழையது மறக்கிறது.
புதியது கண்ணை மறைகிறது.
ஏமாந்தது
யாரும் அல்ல.
ஏமாத்தியது விதி.
அதுவே கர்மா.....

Monday, 2 January 2012

தவறு

அழிந்தவைகளைக் கண்டு
அழியாதவை
அழிகின்றன.

(விடலைகள் இணையதளத்தின்
பயன்பாட்டை அறியாமல்,
புரியாமல்,உணராமல்
தவறாக பயன் படுத்துவதை
குறித்த குறிப்பு.)

நீர்க்குமிழி



வெளியில் இருந்த காற்றை உள்வாங்கி

சிறிது
நேரத்துக்குள் எத்தனை

ர்
ஜாம்.

உன் நேரம் முடிந்ததும்
மீண்டும் காற்றோடு காற்றாய்....

நீயும் என்னை போல்தானா..?

Tuesday, 27 December 2011

மனித பிறவி

நான் மனிதன்.
ஆமாம் நான் மனிதன்தான்.
என்னுடையது மனித பிறவி.

எத்தனை மரம் செடி, கொடிகள் நடவு செய்திருப்பேன்.
(உண்மையில் அறுவடை அல்லவா செய்தேன்).

என்னால் பூமிக்கு எவ்வளவு நன்மை. எத்தனை உயிர்களுக்கு நான் நன்மை புரிந்திருப்பேன்.
(உண்மையா இது )

தினசரி பத்திரிக்கை,தொலைக்காட்சி ஏதோ வழியில் செய்திகள் வேண்டும்.
(நாட்டுக்கு ரொம்ப அவசியம்.இவற்றால் நாட்டுக்கு என்ன பயன்)

எனக்கு பிடிக்காவிட்டால் சிறிது கோபப்படுவேன்.
(அப்படியா? உன்கிட்ட நிஜ துப்பாக்கி இருந்திருந்தால்
எத்தனை பேர் கபாலம் காலியாகி இருக்கும்.
ஏன் உன் கபாலமே உன்னிடம் இருந்திருக்காதே.!.)
சிறிது கோபமாம்.

ஜப்பான்ல சுனாமியாம். ஐயோ பாவம்.
அமெரிக்காவுல பொருளாதாரம் பாதிப்பு. அடக்கடவுளே என் பங்குகளும் சரிந்து விட்டது.
எத்தனையோ செய்திகள். எத்தனையோ பரிதவிப்புகள்.
அந்தோ பரிதாபம்.
நான் மனிதன்.
என் மானிடப்பிறவி முடிந்தது.

என் மொழி.

தமிழ்.

இப்படி தமிழில் புலம்பத்தான் உதவுது.

தமிழுக்காக நான் என்ன செய்தேன்.
(என்ன செய்யவில்லை..?)

இலங்கை...?

முல்லைபெரியாறு...?


ஐயா,
சிறிது கோபப்படுபவரே
கோபம் வேறு. ரோஷம் வேறு.
தமிழுக்கு உதவுங்கள்.

நான் மனிதன்.
ஆமாம் நான் மனிதன்தான்.
என்னுடையது மனித பிறவி.

Tuesday, 20 December 2011

விதிக்கப்பட்டது எது ?

உனக்கு விதிக்கப்பட்டது எது
என தெரியாமல் , உணராமல்
ஒவ்வொரு முறையும் ,
வீழ்ந்து ,வீழ்ந்து
இழிவு படுவது ஏன் ?
விதி உனக்கு விதிக்கப்பட்டது.
அது உன் கர்மா.
அதை உன்னால் மாற்ற முடியாது.
அதன் வழியே செல்.
வேண்டுமானால் தற்போது வாழும்
வாழ்கையில் முடிந்தவரை புண்ணியம்
செய்து நிம்மதியை பெற்று கொள்.
இதுதான் உனக்கு விதிக்கப்பட்டது.

Monday, 19 December 2011

இதயம்


இரும்பால் செய்தால்
துரு பிடிக்குமென

மரத்தால் செய்தால்
உளுத்து போகுமென

கல்லால் செய்தால்
உடைந்து போகுமென

எதையும் தாங்க வேண்டுமென சதையால் இதயத்தை படைத்த
இறைவா உனக்கு நன்றி.