Saturday, 15 August 2015

வெற்றி முறை




உன்னை ஒருவன் அழிக்க வேண்டுமானால் ,

அவன் பணத்தால் அது முடியாது.
 

போட்டி தொழில் முறையும் அவனுக்கு பயன்படாது.
 

வேறு எந்த முறையும் முழுமையாக
செயல்படாது.

 

ஒரே ஒரு வழிதான் உள்ளது.
 

உனக்கு விடாமல் மன உளைச்சலை (செலவே இல்லாமல்)
அவன் தந்து கொண்டே இருந்தால் போதும்.

 

வெம்பி வெதும்பி 
நீயாகவே உன் பெயர், புகழ் ,தொழில்,உன் சிந்தனை,
உன் உறவுகள், உணர்வுகள்
அனைத்தையும் அழித்துக் கொள்வாய்.
 

சுருக்கமாக கூறின் நீ ஜடமாவாய்.
 

எதிரி வெற்றி பெறுவான். 

இதில் தப்பிக்க ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.
 

தொடர்ந்து நமக்கு தரும் அல்லது வரும் 
மன உளைச்சலை உதறி தள்ளி விட்டு
தொடர்ந்து பயணிக்க வேண்டும். எதிரி தானாய் வீழ்வான்.


 உதறி தள்ள தெரியவில்லையா ?.
 

ஒரு மந்திரம் :

நாமாக விரும்பி ஏற்றுக்கொண்டதை
நாமாகவே வெறுத்து ஒதுக்க முடியும்.


என்பதை உணர்ந்தாலே போதும். 

வெற்றி நிச்சயம்.

1 comment :

malathi said...

எத்துனை சக்திவாய்ந்த கருத்துகளை மிகவும் எளிமையாக சொல்லிவிட்டீர்கள் பகைவனின் நயவஞ்ச்ககத்தை எளிதாக கடக்கும் வித்தையை சிறப்பாக சொல்லியுள்ளீர் பாராட்டுகள்.