Friday, 23 March 2018

குழந்தை


குழந்தை வளர்ப்பு..?
அழாதே உன்னை பள்ளிக்கூடத்தில்
கொண்டு போய் விட்டுவிடுவேன் என மிரட்டுவது
குழந்தைக்கு பள்ளிக்கூடத்தின் மீது பயத்தை உருவாக்கும்.
குழந்தைக்கு தேவை அன்பும், அரவணைப்பும்  மட்டுமே...
அன்பினால் குழந்தையிடம் நாம் நினைத்ததை
நடத்தி முடிக்கலாம்.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என
அன்றே சூசகமாக நம் மூதாதையர் கூறி சென்றனர்.

Monday, 19 March 2018

தொழில்


 


தொழில் செய்ய தொழில்நுட்பம் 
அவசியம் தெரிந்து இருக்க வேண்டும்.
நாம் தொழில் செய்ய முடிவு செய்து இறங்கிவிட்டால்,
அதில் குடும்பம், நட்பு எதையும்
அதற்கு இடைஞ்சலாக வர
அனுமதிக்கூடாது.
தொழில் என்பது ஆண்மை. ஆளுமை.
அறியாதவன் நடைபிணத்திற்கு சமம்.
சமுதாயத்தில் முகம் தொலைந்து போவான்.
நிலைமையை ஏற்படுத்திக்கொண்டாலோ.
நிலைமையில் சிக்கிக்கொண்டாலோ
நீ காலத்தின் பிடியில் கைதியே...

Thursday, 22 February 2018

புகழ்

கலைஞனுக்கு பாராட்டும், 
வாழ்த்துக்களும் மட்டுமே பிடிக்கும். 
நல்ல தலைவன் இவற்றை விரும்ப மாட்டான்.
முகஸ்துதிக்கு மயங்க மாட்டான்.
மாறாக இவற்றின் பின்னால் போகும் 

தலைவனின் தொண்டர்கூட்டம் 
அவனை நம்பினால் அழிந்து போகும்.

Tuesday, 13 February 2018

எதிரியை நேசி

உறவுகள் "உச்சு" மட்டுமே கொட்டும்.
நட்புகள் நடப்புகளை விமர்சிக்கும்.
துரோகம் முதுகில் குத்தும்.
எதிரி ஒருவனே உன்னை
வெற்றிப்படிகளில்
ஏறிச்செல்ல
உந்தும் உந்துவிசை.


எதிரியென ஒருவன் இல்லையேல்
உன் முன்னேற்றம் ஆமை வேகத்தில்
மட்டுமே இருக்கும்.


Wednesday, 24 January 2018

பொருத்தமான தம்பதி


அவனோ கேடுகெட்டவன்,
நல்லவன் போல் பண்பாய் பேசி நடிப்பான்.
அவளோ அவன் கேடுகெட்ட
குணத்தை நன்கு தெரிந்தும்,
ஏதும் தெரியாதது போல்,
அவன் கூறியதை நம்புவதாய்
அவனை நம்ப வைக்கிறாள்.
இல்லறம் இனிதே செல்கிறது.
கலியுக தம்பதி...

Friday, 1 December 2017

விண்ணுலக பயணம்


முப்பாட்டன்கள் போனதாக சொன்னார்கள்.
தாத்தா, பாட்டி நன்கு விபரம் தெரியும் முன்னே சென்றார்கள்.
பெரியப்பா, பெரியம்மாவும் சென்றார்கள்.
அப்பா, அம்மா விபரம் தெரிந்த பின் சென்றார்கள்.
சித்தப்பாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.

பிறகு அண்ணன்கள்...
இடையிடையே நண்பர்கள்...
நான் நேசித்த ஒரு சில உயிரினங்கள்.

நாளை நான் மற்றும் நீ...
இது விரும்பினாலும், விரும்பா விட்டாலும்
பயணம் நிரந்தரமானது.
பிரிவு, மாற்றம் என்பது நிலையானது.
பிரிவு என்றும் நம்மை விட்டு பிரியாது.

Wednesday, 29 November 2017

பணக்கட்டு


பணக்கட்டு விழித்திருக்கும்போது,
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 

சில வழக்கு கோப்புகள் உறங்குகின்றன...
பல கோப்புகள் கோமாவிலேயே  கிடக்கின்றன.


Thursday, 2 November 2017

பெரியகாரியம்


எத்தனையோ பெரியகாரியம் (இறந்தவர்கள் வீட்டிற்கு )
சென்றோம்.
நாம் நிரந்தரமாக உறங்கும்போது (இறந்து போதல்)
அவர்கள் யாரும் வரப்போவதில்லை...

பகலில் எரிப்பதற்கு ஒரு விலை.
மதியம் எரிப்பதற்கு அதிகம்.
இரவு எரிப்பதற்கு மிகவும் அதிகம்.
பிணத்திற்கு கூட பணம் இருந்தால்தான் மதிப்பு.

Tuesday, 3 October 2017

சாபம்


சாபம் என்பது நாம் ஒருவருக்கு செய்யும் தீங்கிற்க்கு,
அவர் வயிறெரிந்து கூறும் வார்த்தை மட்டும் சாபம் ஆகாது.
நாம் செய்யும்  பாவம் அவர் ஏதும் கூறாமல் விட்டு சென்றாலும்,
ஒரு நொடிப்பொழுது அவர் உள்ளம் துடித்தாலே போதும்.
நம் தலைமுறை அனைத்தும் துடிதுடித்து துன்பம் அனுபவிக்கும்.
அதை நாம் நெஞ்சுபதற சாகும்வரை அனுபவிக்க நேரிடும்.
இன்று பணத்தின் போதையில் எல்லாம் மயக்கமாக..., ஏளனமாக இருக்கும்.
எவ்வளவு கதறினாலும் கடவுள் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்ப்பார்.
காலம் பதில் சொ(கொ)ல்லும்போது வலி மிகவும் அதிகமாக இருக்கும்.

Thursday, 21 September 2017

என்னவள்


சுறுசுறுப்பானவள் நீ.
புத்திசாலித்தனம், 

சிலநேர சமயோஜிதமும்
உன்னிடம் என்னை வியக்க வைத்த 

விடயங்கள் பலமுறை.
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்.
 

அதனால்தானோ என்னவோ, 
நீ சில சமயத்தில் எத்தனை முறை கொட்டினாலும்,
நான் அந்த வலியில் இன்பமடைகிறேன்
.

Friday, 11 August 2017

ஏளனம்(மனசாட்சி)


என் வக்கத்த நிலையைக் கண்டு,
என்னைப்பார்த்து கைகொட்டி (சிரித்தும்), சிரிக்க உலகமே காத்திருக்கு.
உலகமும் நீயும் ஒன்றா?
இதில் நீ வேற...
என்ன கொடிமை...?


Saturday, 22 July 2017

இணையம் குடி பேரழிவை நோக்கி இந்தியா


இணையதளத்தில் மிகுந்த பயனுள்ள வசதிகள் இருப்பது நிதர்சனமான உண்மை.
மேலும் ஒருசில வெளி நாடுகளில் ஆபாச இணையதளங்கள் வராதவாறு முடக்கியுள்ளனர்.
அது நாட்டிற்கு ஆரோகியமான விஷயம்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவரானதும், தமிழ் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக ஒளிபரப்பி வந்த இணையதளங்கள் சிலவற்றை இந்தியாவில் முடக்கப்பட்டன.
இதுவே  சாத்தியமான போது இந்தியாவில் ஆபாச இணைய தளங்களை முடக்க முடியாதா?

தமிழகம் தற்போது குடித்துவிட்டு நிதானமில்லாமல் இருப்பதால், மத்தியபிரதேசம், டெல்லி நிருபையா போன்ற பாலியல் வன்கொடுமை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவே.
பணம் படைத்த அம்பானி குழுமம் இணையதளம் வசதிகொண்ட கைபேசி இலவசமாக வழங்கினால் அனைத்து ஆபாச இணையதளங்கள் சுதந்திரமாக சுற்றும் இந்தியாவில்,  பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடும். பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
 வெளிஉலகம் அறியாத குடும்ப பெண்கள் கட்டுபாடுகளை இழப்பர்.
கலாசாரம், பண்பாடு  சீரழியும். 
பெண்களை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பெண் குழந்தைகளை கண்காணித்து பாதுகாக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு.
13 வயது நிரம்பிய சிறுவன் (!) கற்பழித்தால் கண்டிப்பாக அந்த பெண் கருத்தரிக்க வாய்ப்புண்டு . ஆனால் அந்த கேடுகெட்டவனுக்கு  கடும் தண்டனை குடுக்க நம் சட்டத்தில் இடமில்லை.ஏனெனில் அவன் மைனராம்.
பதினேட்டு வயது ஆகாதவனாம்.அவன் சிறுவனாம்.(!)

மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறையே ....
கார்பரேட் கம்பனி துணையை மட்டுமே நம்பி  பதவியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே ஆட்சி நடத்தினால் சாதாரண மக்களின் வாழ்க்கை ?
இந்தியாவின் நிலை ? விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. 

தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இனி வரும் தேர்தலில் ஜாதிக்காரன், கட்சி சின்னம், பாராமல் 
பொங்கல் விடுமுறையை தடைசெய்து மீண்டும் வாபஸ் பெற்றது, 
எண்ணற்ற விவசாயிகள் தற்கொலையை கண்டுகொள்ளாமல் போனது, தமிழகத்தை சுடுகாடாக மாற்ற நெடுவாசல் திட்டம்,
ஜல்லிக்கட்டு அறப்போராட்டம் நடத்திய மக்களை...,
நாட்டு மாட்டினங்களை பூண்டோடு அழிக்க முயற்சித்தது,
அனைத்தையும் மனதில் வைத்து வேட்பாளர்களை தகுதியறிந்து தேர்வு செய்யுங்கள். இனியாவது விடியலை நோக்கி பயணிப்போம்.

 

Monday, 10 July 2017

காலனும் நானும்



சில நேரங்களில் இருக்கிறாரா, இல்லையா என்று சந்தேகம் தோன்றுகிறது.
எனை போல் நீங்களும் மௌனியா....
அனுபவிப்பவனுக்குத்தான் தெரியும் வலியின் கொடுமை.
வாழவேண்டும் என எத்தனையோ மானிட பதர்கள் 
துடியாய் துடிக்க 
திடீரென மாண்டுபோகின்றனர்.
உங்களிடம் வந்து சேர வேண்டும்
என துடிக்கும் எத்தனையோ பேர் 
இன்னமும் துடிதுடித்து வாழ்கின்றனர். 
எனைப்போல...

Thursday, 6 July 2017

சுமைதாங்கி



அன்னப்பறவை பாலையும், தண்ணீரையும் 
தனியே பிரித்து பாலைமட்டும் பருகுமாம்.
அது போல்,

சில குடும்ப தலைவர்கள் குடும்பத்தின் மொத்த துன்பத்தையும் 
தான் ஏற்றுக்கொண்டு,
மீதி மகிழ்ச்சியை தன் குடும்பத்திற்கு தந்து விடுகிறார்கள்.

Sunday, 4 June 2017

வறுமை


வருமானம் வரும்போது அதன் அருமை தெரியாமல், 
பிணந்தின்னி கழுகுகள் சுற்றி முகஸ்துதி பாட, 
அனைத்து செல்வத்தையும் தொலைத்தது 
கூட தப்பில்லை என தோன்றுகிறது.
கடன் இல்லாதவரை யாருமே செல்வந்தன்தான்.
சிறிதும் யோசிக்காமல் கடன் பெற்று விட்டால், 

கடன் வட்டியை குட்டியாக பெற்றுப்போடும்.
குட்டி வளர வளர குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி முற்றிலும் போய்விடும்.
பிறகு வருந்தி என்ன பலன்.

Sunday, 28 May 2017

நம்பிக்கை


நம்பிக்கைத்தான் வாழ்க்கையாம். 

ஆம் என்றாவது நாம் முன்னேறிவிடலாம் என்று சில பேர்

நடப்பது நடக்கட்டும் என்று சில பேர்.

முயற்சித்து பார்க்கலாமே என்று சில பேர். 

காலதேவன் வந்து அழைத்து செல்ல மாட்டானா? என பல பேர். 

இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை முடிந்துபோகிறது.

நம்பிக்கைதான் வாழ்க்கையாம்.

Wednesday, 17 May 2017

நீயும் நானும் பிச்சைக்காரர்கள்தான்




நீயும் நானும் பிச்சைக்காரர்கள்தான்.

நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான்,

என்ன செய்வது உண்மை இதுதானே.

பணம்தானே நம் தேடல்...

உணர்வுகள் நமக்கு முக்கியமில்லையே..

கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் முதலாளிகூட்டம்.

அனைத்திலும் ஊழல், அரசியல்வாதிகள், அதிகாரிகள்.

நீதான் எல்லாம் தெரிந்த அறிவாளியாயிற்றே.

நீ என்னை குறைகூறுவாய். நானும் உனைபோலதான்.

நாட்டைப்பற்றி நமக்கென்ன கவலை.

இரண்டாயிரம் ரூபாய்க்கு நம் ஓட்டை விற்போம்.

ஊழலற்ற ஆட்சி என வாய்கிழிய பேசி, ஊழலே ஆட்சி செய்யும் கொடுமை.

இறுதியில் ஒன்று...

இனி இரண்டே இனம்

ஒன்று அடிமையினம்,

இரண்டு பணக்கார இனம்.

நடுத்தரமும் இல்லை.

ஏழையும் இல்லை.

நாங்கள் பிச்சைக்காரர்கள்.