Friday 28 September 2018

ஏமாற்றம்


ஏமாந்தது உன் குற்றமே,
ஏமாற்றியவரின் குற்றம் அல்ல
அளவுக்கு மீறிய நம்பிக்கை
ஏமாற்றத்தில் தானே முடிகிறது.
இதற்கு தீர்வு நம்பிக்கையின் அளவை
நம் கட்டுப்பாட்டில் வைப்பதுதான்.

ஜனனம்


சற்று காலம் தங்கி போக வந்துள்ளோம்,
போகும் இடம் நன்கு தெரியும்.
வாழும் குறுகிய காலத்தில்,
போகும் நேரம் தெரியாததால்...
எத்தனை துன்பங்கள், எத்தனை இன்பங்கள்.

Monday 3 September 2018

சுவீகாரம்


குழந்தை இல்லையென ஏங்குவர்.
கோவில், குளங்களை சுற்றுவர்.
மருத்துவர்களுக்கு வாரி வழங்குவர்.
சுப நிகழ்ச்சி, சுப காரியங்களை தவிர்ப்பர்.
தம்பதியர் ஒருவரை ஒருவர் குறைகூறி
குடும்ப வெறுமையை அதிகமாக்குவர்.
ஆயிரக்கணக்கில் அனாதைக் குழந்தைகள்
இருந்தாலும் தத்தெடுத்து வளர்க்க
ஒன்றுக்கும் உதவாத சமுதாயத்தை கண்டு அஞ்சுவர்.
அனாதை குழந்தை எந்த ஜாதியோ? ரத்தத்தில் ஜா(தீ)தி!
குழந்தையும் தெய்வமும் ஒன்றென அறியவில்லை.

மனிதம் மரித்தது இந்த இடத்தில்.
சுவீகாரம் எடுத்தவர்களைக் கேளுங்கள்,
அவர்கள் பூமியில் வாழும் காலத்திலேயே
சொர்கத்தை அனுபவிப்பதை கூறுவார்கள்.

இவர்கள் அனுபவிக்கும் துன்பத்திற்கு
இவர்களே பொறுப்பு.