Tuesday 27 December 2011

மனித பிறவி

நான் மனிதன்.
ஆமாம் நான் மனிதன்தான்.
என்னுடையது மனித பிறவி.

எத்தனை மரம் செடி, கொடிகள் நடவு செய்திருப்பேன்.
(உண்மையில் அறுவடை அல்லவா செய்தேன்).

என்னால் பூமிக்கு எவ்வளவு நன்மை. எத்தனை உயிர்களுக்கு நான் நன்மை புரிந்திருப்பேன்.
(உண்மையா இது )

தினசரி பத்திரிக்கை,தொலைக்காட்சி ஏதோ வழியில் செய்திகள் வேண்டும்.
(நாட்டுக்கு ரொம்ப அவசியம்.இவற்றால் நாட்டுக்கு என்ன பயன்)

எனக்கு பிடிக்காவிட்டால் சிறிது கோபப்படுவேன்.
(அப்படியா? உன்கிட்ட நிஜ துப்பாக்கி இருந்திருந்தால்
எத்தனை பேர் கபாலம் காலியாகி இருக்கும்.
ஏன் உன் கபாலமே உன்னிடம் இருந்திருக்காதே.!.)
சிறிது கோபமாம்.

ஜப்பான்ல சுனாமியாம். ஐயோ பாவம்.
அமெரிக்காவுல பொருளாதாரம் பாதிப்பு. அடக்கடவுளே என் பங்குகளும் சரிந்து விட்டது.
எத்தனையோ செய்திகள். எத்தனையோ பரிதவிப்புகள்.
அந்தோ பரிதாபம்.
நான் மனிதன்.
என் மானிடப்பிறவி முடிந்தது.

என் மொழி.

தமிழ்.

இப்படி தமிழில் புலம்பத்தான் உதவுது.

தமிழுக்காக நான் என்ன செய்தேன்.
(என்ன செய்யவில்லை..?)

இலங்கை...?

முல்லைபெரியாறு...?


ஐயா,
சிறிது கோபப்படுபவரே
கோபம் வேறு. ரோஷம் வேறு.
தமிழுக்கு உதவுங்கள்.

நான் மனிதன்.
ஆமாம் நான் மனிதன்தான்.
என்னுடையது மனித பிறவி.

Tuesday 20 December 2011

விதிக்கப்பட்டது எது ?

உனக்கு விதிக்கப்பட்டது எது
என தெரியாமல் , உணராமல்
ஒவ்வொரு முறையும் ,
வீழ்ந்து ,வீழ்ந்து
இழிவு படுவது ஏன் ?
விதி உனக்கு விதிக்கப்பட்டது.
அது உன் கர்மா.
அதை உன்னால் மாற்ற முடியாது.
அதன் வழியே செல்.
வேண்டுமானால் தற்போது வாழும்
வாழ்கையில் முடிந்தவரை புண்ணியம்
செய்து நிம்மதியை பெற்று கொள்.
இதுதான் உனக்கு விதிக்கப்பட்டது.

Monday 19 December 2011

இதயம்


இரும்பால் செய்தால்
துரு பிடிக்குமென

மரத்தால் செய்தால்
உளுத்து போகுமென

கல்லால் செய்தால்
உடைந்து போகுமென

எதையும் தாங்க வேண்டுமென சதையால் இதயத்தை படைத்த
இறைவா உனக்கு நன்றி.

Wednesday 14 December 2011

உதடுகள்


இரு உதடுகளையும்

மேலேயும்

கீழேயும்

இரு பக்கவாட்டிலும்


விரித்து
பற்களை
காட்டினால்...

நாய்க்கு வெறுப்பின் அறிகுறி.

மனிதனுக்கு மகிழ்ச்சியின் அறிகுறி.

Tuesday 13 December 2011

எங்கள் ஒற்றுமை

ஜாதி, மதம், இனம், மொழி
மற்றும் பல பல காரணங்களால்
எத்தனை கசப்புகளோடு
வாழ்ந்திருந்தாலும்
எல்லோரும்
ஒற்றுமையாய்
காலமானார், கண்ணீர் அஞ்சலி
பகுதிகளில்....

Thursday 8 December 2011

நிம்மதி

நிலைமையை
ஏற்படுதிக்கொண்டாலோ ,

நிலைமையில்
மாட்டிக்கொண்டாலோ ,

நிம்மதியை இழப்பாய்....

விதி

அதிகாரத்தின்
ஆதிக்கத்தில்
விதி
செயல்படுகிறது.