Sunday 26 September 2021

ஏமாற்றம்

 

 




நம்பிக்கையில் தொடங்கி,
எதிர்பார்ப்பில் பயணித்து,
ஏமாற்றத்தில் முடிவடைகிறது.

ஏமாற்றத்தில் சிக்கக் கூடாது எனில்,
எதிர்பார்ப்பில் சிக்கக் கூடாது.
எதிர்பார்ப்பில் சிக்கக் கூடாது எனில்,
எதன் மீதும் நம்பிக்கை வைக்காதே.

கடினம்தான். 

ஏனெனில் நம்பிக்கை பிறப்பதே
அன்பின் மூலம்தான்.

Tuesday 17 August 2021

மந்திரியின் தந்திரம்


 எளிதில் முடியக்கூடிய பிரச்சனைகளாக இருந்தாலும்,
அதை முடிக்கவிடாமல், தவறான யோசனைகளை
கூறி அரசனை தன்னிடம் எப்போதும் யோசனை
கேட்கும்படி பார்த்துக்கொள்வார் மந்திரி.
சுருக்கமாக கூறின் மன்னன் எப்போதும்
பிரச்சனையில் இருக்குப்படி பார்த்துக்கொள்வார்.

Monday 9 August 2021

கசாப்பு கடைக்காரர்

 


 

எவ்வளவு விலை உயர்ந்த
ஆட்டை பார்த்தாலும்
அவர் கண்களுக்கு அதன் அருமை
தெரியாது.
அது எத்தனை கிலோ தேறும்
என்றே நினைப்பார்.
அது போலத்தான்
சில மனிதர்களும்,
நம் அருமை தெரியாமல்,
புரியாமல் நம்மை கூரு போடுகிறார்கள்.

Monday 14 June 2021

காரியக் காதல்


நீ காதலிக்கும் போது
எதிர்கால திட்டத்திற்கு
நீ எத்தனை எத்தனை, 
என்ன என்ன நிபந்தனைகள் ,
திட்டங்கள் போட்டாலும்
எல்லாவற்றிற்கும் சம்மதம்
கூறும் எதிர் பாலினம்.
திருமணத்திற்கு பின்தான்...
அதன் உண்மையான
சுரூபத்தை காட்டும்.
அப்போதுதான் உனக்கு
புரியும்.
உன் கர்மா உன்னை நம்ப வச்சு... 
குதூகலிப்பதை.

Saturday 5 June 2021

மிக கேவலமான வாழ்க்கை



 

பணக்காரனுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியாளன்.
தன் வேலையை மட்டும் பார்த்தால் மட்டுமே,
அவன் மிகவும் உயர்ந்தவன்.

அதை விடுத்து மற்றவர்களின் விஷயத்தில்,
தேவையின்றி மூக்கை நுழைத்து,
அதை தன் முதலாளியிடம் ஒன்றுக்கு இரண்டாக
போட்டு குடுத்து
, அதனால் தாம் 
முதலாளியிடம்  மிகவும் உயர்ந்து விட்டதாக
எண்ணம் கொண்டு பிழைப்பு நடத்தும் சாக்கடை புழுக்களுக்கு தெரியாது,
என்றுமே எச்சில் இலையில் தான் தம் வாழ்க்கை என்பது.
இப்படிப்பட்டவனுக்கு நிறைந்த, நிரந்தர முதலாளியும், வாழ்க்கையும்
என்றுமே கிடைக்காது.

இந்த எச்சில் இலை புழுக்களினால்
மற்றவர்களுக்கு எத்தனை எத்தனை பிரச்சனை.
இவைகளை நாம் எந்த சூழ்நிலைகளிலும்
நம் விஷயத்திலோ , வீட்டிற்குள்ளோ அனுமதிக்கவே கூடாது.

Wednesday 31 March 2021

தேர்தல்களம்

 


 

ஓடி ஒளிந்தவனெல்லாம்
ஆடிப்பாடுகின்றனர்.
ஜாதி(தீ), மதம் வெறி
தலைவிரித்து ஆடுகிறது.
காசுக்கும், பொட்டல பிரியாணிக்கும்,
கூட்டம் கூடுகிறது.
நடிகர்களை பார்க்க
கூட்டம் அலைமோதுகிறது.
தேசப்பற்றை யாரிடமும்
பார்க்க முடியவில்லை.

ஜாதி, மதம் பாராமல்,
வேட்பாளர்களை தேர்வு
செய்யாத வரை தேச நலன்
என்பது வெறுமையே...


இறுதியாக...
உங்களுக்கு என்ன வேண்டும் என
யாரும் கேட்கவில்லை. நான் வந்தால்
............................... என உளறி கொட்டி,
கிளறி மூடுவதையே பார்க்க முடிகிறது.