Monday 27 April 2020

ஈரோடு கொரானாவில் இருந்து விரைவாக மீண்டது எப்படி?



1.மக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் தவறாமல் கடைபிடித்தனர்.
(கடைபிடிக்காத ஒரு சில இடங்களில் விஷயம் தெரிந்தவர்கள் கடுமையாக கண்டித்தனர்)
முகக்கவசம் அணியாதவர்களை மக்கள் அருவருப்பாக பார்த்து விலகி சென்றனர்.
2.காவல்துறையினர் மிக மிக அயராது உழைத்தனர். எங்கும், எப்போதும் அவர்களே தெரிந்தனர்.
3.வெளியில் சுற்றி தெரிந்தவர்களை காவல்துறையினர் அன்பாக எச்சரித்து அனுப்பினர்.
4.ஊரடங்கின் போது பெரியார்நகரில் ஒரு காவலர் வந்து நின்று அங்கு இருந்தவர்களை வீட்டில் இருக்கலாம்ல என்று கூறிவிட்டு சிறிது நேரத்தில் தனக்கு தானே ஏதோ பேசிக்கொண்டிருந்தார். (கடைகள், வாகனங்கள், மக்கள் நடமாட்டம்) இயல்பு நிலை இல்லாத ஊரில் தனியே தொடர்ச்சியாக தன் பணியை செய்து கொண்டிருந்த அவர் எவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பார் என யோசியுங்கள். உங்களுக்கே புரியும்.
5.துப்புரவு பணியாளர்கள் இதுவரை ஈரோடு மக்கள் கண்களில் பார்த்திராத நவீன கருவிகளில் அடிக்கடி நாள்தோறும் ஏரியா வாரியாக மருந்தடித்தனர்.( கொசு மற்றும் ஈக்கள் மிகவும் குறைந்தது )
6.செவிலியர்கள் விடாது பயணம் மேற்கொண்டதை பார்க்க முடிந்தது.
7.மருத்துவர்களை வெளியில் எங்கும் பார்க்கமுடியவில்லை. மருத்துவமனையிலேயே தங்கி கொரோனா நோயாளிகளை மீட்டுவருவதில் முழுமையாக பணியாற்றியதை பின்பு தெரிந்து கொண்டேன்.
8.மின் ஊழியர்கள் மின் வெட்டு ஏற்படாமல் மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டனர்.
9.கை தட்டி நன்றி தெரிவிக்கும் நேரத்தில் முதலில் ஆங்காங்கே மாடியில் கூச்சத்துடன் கை தட்ட ஆரம்பித்த ஈரோடு மக்கள் நேரம் ஆக ஆக அனைவரும் மாடியில் வந்து ஐந்தரை மணிவரை கை தட்டி நன்றி தெரிவித்த போதுதான் தெரிந்தது ஈரோட்டு மக்களின் நன்றி உணர்ச்சி எவ்வளவு என்று. (இந்த நிகழ்ச்சியை எந்த மீடியாவும் காட்டவில்லை)
10. காலை 6மணி முதல் 9மணிவரை அத்யாவசிய கடைகள் திறந்து வியாபாரம் காவல்துறையினரின் கண்காணிப்போடு நடந்தது. அதன்பின் மக்கள் வீட்டிற்குள் தங்களை அடைத்துக்கொண்டனர்.
11.விளக்கேற்றும் தினத்தில் மாடியில் தீபங்கள் மற்றும் மொபைல் வெளிச்சம் சுடர்விட்டு விளையாடியது.
ஒரு சில வீடுகளில் வெளியே கார்த்திகை மாத தீபங்கள் போல நிறைய ஏற்றிருந்தனர்.சிலர் தீபாவளிக்கு மீந்துபோன வானத்தில் வெடித்து வர்ண ஜாலங்கள் காட்டும் வாணவேடிக்கைகளை வெடித்தனர்.
12.மாவட்ட ஆட்சியர் கதிரவன் அவர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்கள் கடமையை ஆச்சு பிசகாமல் மிக கடுமையாக போராடி ஈரோட்டை மீட்டனர் என கூறினால் மிகையாகாது.

இறுதியாக...
இந்த நிலை முடிந்து நாடு சகஜ நிலைக்கு திரும்பியதும், இதற்காக போராடிய காவலர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், மருத்துவர்கள், மின் ஊழியர்களுக்கு ஷிப்ட் முறையில் மாதம் ஒரு வாரம் சம்பளத்துடன், குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்து ஆறுமாதம் இவர்களை மனஇறுக்கத்தில் இருந்து விடுவித்து கடவுளாகிப்போன இவர்களை மீண்டும் மனிதனாக்குவேன். நான் பிரதமராகவோ, முதலமைச்சராகவோ அல்லது என் கையில் அதற்கு அதிகாரம் இருந்திருந்தால்...