Wednesday, 26 December 2012

நிறைவுரை


அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்களும்,நன்றியும்.
என்னுள் பல ஆண்டுகளாக உறங்கி கிடந்த எழுத்து உணர்வுகள்
என் blogspot வழியாக பகிர்ந்தேன்.
                    தற்போது மீண்டும் என் உணர்வுகளை முடமாக்கி,
                                 மௌனமாக்க முடிவு செய்துள்ளேன்.
                                        ஆதலால் இந்த நிறைவுரை.

வலி எல்லோருக்கும் பொது.
அதை அவரவர் தாங்கிக்கொள்ளும்
தன்மையை பொருத்து மாறுபடுகிறது.
என் வாழ்க்கை என்னும் பரமபரத்தில் ஏணிகள் மிகவும் குறைவு.
பாம்புகளே அதிகம்.
தாயம் போட்டு ஒரு கட்டம் முன்னேறினால்
கடும் ............  கொண்ட பாம்புகள் கொத்தி மீண்டும் கீழே கொண்டு
செல்கின்றன.
எத்தனை தாயத்து கட்டினாலும்,
தாயம் விழும் போதுதான் விழும்.
கடும் வலியை தாங்க உணர்வுகளை முடமாகினால்,

                                    வலி பல மடங்கு அதிகரிக்கும்.

இதனால் ஞானம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பிரியாவிடை.

                முடிந்தவரை பார்வை இல்லாதவர்களுக்கு உதவுங்கள்.

நான்(!) blogspot களில் உலா வந்த போது என் மனதை தொட்ட
இரண்டு வலைத்தளங்களை பற்றி
தற்போது அவசியம் விமர்சிக்க மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

முதலாவது:

http://kovaikkavi.wordpress.com/ வேதாவின் வலை.
சகோதரியின் கருத்துமிக்க கவிதை (இலக்கிய) உணர்வுகள் எண்ணில் அடங்காதவை.
அவரின் பொறுப்புமிக்க பதில் மதிப்பு மிக்கவை.  
அவரின் விமர்சனம் பாமரனையும் பரமனாக்கும்.
அவரின் வலை படிக்க எனக்கு பாக்கியம் கிடைத்ததில் நான் புண்ணியம் செய்ததின் பலன்.
பல்லாண்டு வாழியவே,அவரும் அவரின் குடும்பத்தாரும்.

இரண்டாவது:

http://thmalathi.blogspot.in/.
இந்த சகோதரி ஒரு தமிழ்ப்பெண் என்பதில் எனக்கு மிகவும் பெருமையே.
நான் என் நண்பர்களிடம் இவரைப்பற்றி கூறும்போது
இவர் எழுத்துக்கள் நெருப்பாக பற்றி எரியும்,
இவர் பேனா எடுத்து இவர் பெயரை ஒரு பேப்பரில் எழுதினால் அந்த எழுத்துக்கள் நெருப்பாக பற்றி எரியும் என விமர்சித்ததுண்டு.
கவிதைநடை (எழுத்துநடை) மயில் இறகால் வருடும்.
கோபப்பட்டு வரும் வார்த்தைகள் தீக்கனலாய் கொழுந்துவிட்டு  எரியும்.
தற்போது மங்கள நாண் நோக்கும் எந்தன் சகோதரி,பின்வரும் நாளில் குழந்தைகளின் மழலைகளையும்,அதன் குறும்புகளையும் தாலாட்டாய்
செதுக்கும்போது
தென்றலோடு பனிக்காற்றும் கலந்து வரும்.
அப்போது அனைவரின் விமர்சனமும்,
"தீர்க்கசுமங்கலி பவ", "அஷ்ட ஐய்ஸ்வரியமும் பெற்று பல்லாண்டு வாழ்க" என்பதே ஒரு மனதாய் இருக்கும்.  
இருவரின் எழுத்துக்களும் காலத்தால் அழியாத தாக்கத்தை ஏற்படுத்துபவை.

                                இருவர் வலைகளும் மிகவும் சிறப்புமிக்கவை.

இருவரின் எழுத்துக்களும் என்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.
என் வலைதளத்திற்கு வருகைபுரிந்த அனைவருக்கும், விமர்சித்தவர்களுக்கும் என் நன்றியை சமர்பிக்கிறேன்.
நன்றி.  
           

Monday, 3 December 2012

தா(தூ)ய்மை


எப்போதும் (அன்பை வெளிப்படுத்தாமல்) கடும் சொற்களால்
வசை பாடும் தாய்
தன் தூய்மையை
இழந்து விடுகிறாள்.
பிற்காலங்களில் குழந்தையின்
அன்பின்றி
அகாலமரணமடைந்த
ஆத்மாவின் அவஸ்தையை
பூமியிலேயே அனுபவிப்பாள்.

Wednesday, 17 October 2012

சில்லறை


சில்லறை சில்லரைதான்.
நோட்டு நோட்டுதான்.
சில்லறையை உருக்கி
நோட்டாக்க முடியாது.
அது உலோகம்.எது மதிப்புமிக்க காகிதம்.
வைப்பாட்டிகள் போல
வைப்பாட்டர்களும் (வைப் பார்ட்னர்களும்)
wife partner களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Saturday, 13 October 2012

துக்கத்தின் எல்லை

மனதில் குழப்பம், துன்பம்
சிகரட் பாக்கட் பாக்கெட்டாக ஊதியாச்சு
துன்பம் போகலே.
பாட்டில் பாட்டிலாக மதுவும் குடிச்சாச்சு
போதை தெளிஞ்சவுடன் காத்திருந்த துன்பம்
மீண்டும் உள்ளே வந்தாச்சு.
தியானம் பண்ண முடியல.நிம்மதியில்ல
தற்கொலை செஞ்சா அந்த துன்பம் இரு மடங்காகி
நம்மைச் சார்ந்தவங்களை பற்றிக்கொள்ளும் என்பது
நன்கு தெரியும்.
ஒரே வழிதான் இருக்கு.
மொபைல ஆப் பண்ணீட்டு கோவிலுக்குள்ளே போய்
கடவுள் முன்னாள் வெட்கம், மானம், வறட்டு கவுரவம்
எல்லாம் விட்டு கதறி முறையிடு.
உன் துன்பத்துக்கு துன்பம் தர ஒரே வழி இதுதான்.

    

அன்றும் இன்றும்

இன்று
காதல் என்னும் கல்லறைக்கு பல வழி,
காமம் என்னும் கோவிலுக்கு ஒரு வழி.

Monday, 10 September 2012

மதம்

மதம் என்பது மரபு வழியாக வந்தது.
நீ பாவி என் மதத்தில் சேர்ந்துகொள்.
புனிதமாவாய் என்பதுபோல் எந்தமதம் அழைத்தாலும்
அந்த மதத்தில் பாவிகளைத் தவிர யார் இருக்க முடியும்.
மதம் மாறுதல் என்பது பெற்ற தாயை விற்பதுக்கு சமம்.
எல்லா மதமும் புனிதமானதுதான்.ஒவ்வொரு மதமும்
மனிதன் மனிதனாக வாழ நெறிமுறைகளை கொண்டுள்ளது.
அவனவன் தான் செய்யும் அயோகியதனத்தை தன் மதத்தின் பெயரில்
தப்பித்துக்கொள்ள பார்க்கிறான்.
அவனவன் அவன் மதம் கூறும்படி ஒழுக்கமாக வாழ்ந்தாலே
போதுமானது.பிறரை தன் மதத்தினுள் வரும்படி வற்புறுத்துவது
பிறர் மனைவிக்கு அழைப்பு விடுப்பது போலாகும்.
பிறர் மதத்தினை கேவலமாக விமர்சிப்பது
பரம்பரையாக வேசியினத்தில்  பிறந்த மூன்றாம் பாலினதவன் செயல்.

மருத்துவ திருடன்

1997 இல் மிக சிறந்த மருத்துவர்.மிகவும் திறமைசாலி.
தேவைக்கு அதிகமாக அகலக்கால் வைத்து
பெரிய மருத்துவமனையை தொடங்கி,
கட்டு கட்டாக பணத்தேவைக்கு
வரும் நோயாளிகளிடம் பணத்தை கறந்து நாட்களை அதிகப்படுத்தி 
அவரும்  இப்போது சந்தையில்
திருடனாக மாறிவிட்டா(ன்)ர்.

நிலை

எந்நிலையிலும் தன்னிலை மறவாதே. 

Wednesday, 11 July 2012

அறிவு

முட்டாள்களுக்கு
அவமானங்களும், ஏமாற்றங்களும் மட்டுமே சொந்தம்.
புத்திசாலிக்கு வெற்றித்திருமகள் உடனிருப்பாள்.
பிறர் குடி கெடுத்து,பிறர் தொழில் அழித்து
சேர்க்கும் பொருள் வாரிசுக்கு பயன் படாமல் போகும்.
 மடிப்பு கலையாத வெள்ளை உடை அணிந்தவர் எல்லாம்
ஒழுக்கஸ்தர் என அர்த்தமில்லை.
ஆடை அழகில்லாதவர் அயோக்கியனும் அல்ல.

Tuesday, 24 April 2012

140 வயது வாழும் ரகசியம்

எங்கேயோ எப்போதோ படித்த ஞாபகம்.
ஒரு ஊரில் ஒரு வயதான முதியவர் வாழ்ந்து வந்தார்.
அவர் தனது 140 வது வயதில் தன் மகனிடம் ஒரு சிறிய பெட்டியை
தந்து இதில் 140 வயது வாழும் ரகசியத்தை நான் எழுதி வைத்துள்ளேன்.
 நான் இறந்தவுடன் இந்த பெட்டியை ஏலம் விட்டு அதில் வரும்
வருமானத்தை நல்ல காரியங்களுக்கு பயன் படுத்துமாறு உத்தரவிட்டு
இறந்தார்.மகனும் தன் தந்தையின் சிறிய பெட்டியை ஏலம் விட்டார்.
நல்ல விலையில் ஏலம் போனது.பெட்டியை வாங்கியவர் அதை
திறந்து பார்த்தார்.அதில்
"உச்சந்தலையை குளிர்ச்சியாகவும்,
உள்ளங்காலை கதகதப்பாகவும் வைத்திருந்தால் 140 வயது வரை
வாழலாம்
"     

Friday, 30 March 2012

ஆத்மாவின் உரைகள்

உணர்வால் உயிர்ப்பித்து
உள்ளதால் எந்த பலனும்
எதிர் பார்க்காமல்,அடக்கத்துடனும்,
பணிவுடனும் வாழ்ந்தால் மரியாதையும்
மதிப்பும் தன்னால் வந்து ஒட்டிக்கொள்ளும்.

பாசம்/கோபம்

அதிகமாக பாசம் வைத்தால் கண்டிப்பாக
ஒரு நாள் வழுக்கிவிடும்.ஹெல்மெட் போட்டிருந்தாலும்

மண்டையும்,இதயமும் நொறுங்கிவிடும்.
அதிக கோபம் ஒரு வகையான வெறி நோய்.
இது வெறி நாய் கடித்து வரும் நோயை விட கொடுமையானது.
இதைதான் படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார்
"அதிகமா ஆசைப்படற ஆம்பிள்ளையும்,
அதிகமா கோபப்படுகிற பொம்பளையும்
நல்ல வாழ்ந்ததா சரித்திரமே இல்ல " பன்ச் சொன்னாரோ !.

Sunday, 18 March 2012

வாய்க்கரிசி

பசி பசி என அலறி துடிதுடித்து இறந்தவனுக்கு,
எல்லா உறவினர்களும் ஒற்றுமையாய்
அரிசி போட்டனர் அவன் வாயில்.
அவன் இருக்கும் வரை அவன் சொத்தை ஏமாற்றித்தின்ற
பிணந்தின்னிக்களுகுகள்.

Tuesday, 13 March 2012

சக்கரச்சுழற்சி

முடியும் நேரத்தில் தொடக்கத்தை தேடுவது,
தொடங்கியதும் (தொடங்கியதே தெரியாமல்) விரைவாக முடிவைத் தேடுவது,
இடைப்பட்ட நேரத்தில் மற்றவர்களை சுழலவைப்பது.
சுழற்சியில் மாட்டுவது.முடிந்தால் தப்பிப்பது.
முடியாவிட்டால் சுழன்று சுழன்று அல்லல்படுவது.
இறை அருள்ளாலும்,
மூதாதையர்,நல்லோர்,பெரியோர் ஆசியினாலும்
கரையேறுதல் நடைபெறுகிறது.
வாழ்க்கைச்சக்கரம் சுழற்சியில் ஏமாந்தால்
வலுக்குமரமாகிவிடும்.

Saturday, 3 March 2012

கலியுக மன்னர்கள்

கசாப்பு கடைக்காரர் ஒரு ஒரு உயிராக போகடிக்கிறார்.
ஆனால் மரம் வெட்டுபவரோ
பல எதிர்கால தலைமுறைகளுக்கு சவக்குழி தோண்டுகிறார்.
மரமே பூமிக்கு அஸ்திவாரம்.
இருவருமே தன் தொழிலை வயிற்றுப் பொழப்புக்காக
செய்வதாக நியாயப்படுத்துகின்றனர்.
தன் வயிற்றுக்காக பெரும் பாவம் செய்யும் இவர்கள்
கலியுக மன்னர்கள்.

Tuesday, 21 February 2012

மொழியிலா மொழி


எத்தனை எத்தனை இனத்தவர்கள்.
எத்தனை எத்தனை மதத்தினவர்கள்.
நீ சொல்வது அவனுக்கு புரியவில்லை.
அவன் சொல்வது உனக்கு புரியவில்லை.
தமிழ் நாட்டிலேயே எத்தனை வகையான
தமிழ் உச்சரிப்புகள்.
ஆங்கிலத்திலும் நாட்டிற்கு நாடு
எத்தனை உச்சரிப்பு மாறுதல்கள்.
அனைத்தையும் வீறுகொண்டு வீழ்த்தும் மொழிகளில் ஒன்று...
ஓவியம்.
ஓவியத்திற்கு மொழியே தேவையில்லை.
அது மொழியில்லா மொழி.
உணர்வுகளுக்குள் ஊடுருவும் சக்தி கொண்டது.

Monday, 6 February 2012

பழிக்குப்பழி

பழிக்குப்பழி வாங்க வேண்டும்
என்ற எண்ணம் வரும் போதே
நாம் பலியாகும் நேரம் வந்து விட்டது
என பொருள்.

Friday, 13 January 2012

ஆஸ்துமா
மானிடபிறவி ஒன்று விதி முடிந்து எமலோகம் வந்தது.

அங்கு
..


எமதருமராஜா
:
"சித்திரகுப்தா
இந்த ஆத்மா செய்த பாவங்கள் என்ன ?.
படி" என்றார்.


சித்திரகுப்தன்:
"தருமராஜா
ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளன இவர் பெயரில்.
இவர் செய்த பாவங்கள் கணக்கில் அடங்காதவை.நீங்களே பாருங்கள்" என்று அனைத்து புத்தகங்களையும் காட்டினார்.

எமதருமராஜா
:

அனைத்தையும் பார்த்த எமதர்மராஜா உடனடியாக
"இந்த ஆத்மாவை நான் மீண்டும் மானிடனாக படைக்க உத்தரவிடுகிறேன்" என்றார்.

சித்திரகுப்தன்
:
"அரசே
அரிது அரிது மானிடனாக பிறத்தல் அரிது என்பது
தங்களுக்கு தெரியாதா?.
அப்படிப்பட்ட பிறவியை இந்த ஜீவனுக்கு
நீங்கள் தந்தால் தவறான நீதி தந்தவர்களாவீர்.
உங்கள் தருமம்
போய்விடுமே".

எமதருமராஜா
:

"சித்திரகுப்தா
நான் மானிடப்பிறவியோடு
ஆஸ்துமா நோயையும் கொடுக்கப்போகிறேன். இந்த ஜீவன் வாழ வேண்டும் என நினைக்கும். ஆனால் வாழ முடியாது. சாக வேண்டும் என நினைக்கும். ஆனால் சாவு வராது. இழுத்து, இழுத்து, இழுத்து, இழுத்து மூச்சுக்காக பூமியிலேயே நரகத்தை அனுபவிக்கும். இது நம் நரகத்தை விட கொடுமையாக இருக்கும். எப்படி நம் தண்டனை?".

சித்திரகுப்தன்
:

"மன்னா
! ஒரு வேளை இந்த ஜீவன் மருத்துவம் பார்த்து
தப்பித்து விட்டால்"?

எமதருமராஜா:
"மருத்துவத்தால்
தள்ளிப்போடலாம்.

முழுமையாக குணப்படுத்த முடியாது.
யோகா,பிராணயாமம்,நல்ல பழக்கவழக்கம், லாகிரி வஸ்துக்கள் இல்லாமை போன்றவற்றால் இந்த நரக வேதனையில் இருந்து விடுபடலாம். ஆனால் இந்த ஜீவன்களுக்கு தெரிந்தாலும் செய்யாது. நரக வேதனையை அனுபவித்து உயிரை விடும்".

***ஆஸ்துமா
தொட்டால் ஒட்டிக்கொள்ளாது.
***
***ஆஸ்துமா
இரத்த சம்பந்தத்தால் வருவது.***

***இவர்கள்
இரத்ததானம் தரக்கூடாது.
***
***இவர்களுக்கு பரிவும்,பாசமும் அவசியம் தேவை. ***
***இவர்கள்
கடும் மகிழ்ச்சியோ, மன உளைச்சலோ
அடையக்கூடாது.***


ஏனெனில்
இவர்கள் ஏற்கனவே நரகத்தை அனுபவிப்பவர்கள்.

Thursday, 12 January 2012

காசில்லாதவன்

நம்பி ஏமாந்தது காசில்லாதது ஆகிறது.
காசில்லாதது குடும்பம் அதை மதிப்பதில்லை.
குடும்பம்
அதை மதிக்காததால்
அது தரித்திரம் அடைகிறது.

"தரித்திரம் பிடித்ததை கட்டிக்கிட்டு ஏமாந்து போய்டேன் "

என்ற சொல்லும் கிடைகிறது.
பழையது மறக்கிறது.
புதியது கண்ணை மறைகிறது.
ஏமாந்தது
யாரும் அல்ல.
ஏமாத்தியது விதி.
அதுவே கர்மா.....

Monday, 2 January 2012

தவறு

அழிந்தவைகளைக் கண்டு
அழியாதவை
அழிகின்றன.

(விடலைகள் இணையதளத்தின்
பயன்பாட்டை அறியாமல்,
புரியாமல்,உணராமல்
தவறாக பயன் படுத்துவதை
குறித்த குறிப்பு.)

நீர்க்குமிழிவெளியில் இருந்த காற்றை உள்வாங்கி

சிறிது
நேரத்துக்குள் எத்தனை

ர்
ஜாம்.

உன் நேரம் முடிந்ததும்
மீண்டும் காற்றோடு காற்றாய்....

நீயும் என்னை போல்தானா..?